பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|(} си от от , , , т. 1 ஆம் திருமுறை நெஞ்சனை) ஆசைகளுக்கு %a) :h தருகின்ற உள்ளத்தை உடையவனாகிய அடியேனை ஈடேற்றி அருளுவாயாக (சு உ) சப்பாணி கொட்டி விளையாடும் சண்முகனே! பாசங்களிற் பட்டுக் கலங்கும் அடியேனை ஈடேற்றி அருளுக (கு.உ) குப்பாச வாழ்க்கை, கு= சிறுமையைக் காட்டும் குக்குடில் என்புழிப்போல, கணேசர் குஆகுவாகனர்' ಶ್ಗ 41. கு= சிறுமை, பாபம், பூமி விண்ணார்=ஆன்மாக்கள், சப்பாணி- கைகளை ஒன்றோடொன்று தட்டுதல். இப் பாடல் பிள்ளைத் தமிழில்' சப்பாணிப் பருவப் பாடலுக்கு இணையாகும். 15. தன் அனுபவம் கூறினது. தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென் பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால் மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே. (அந்) மாவலிபால் மூவடி படி கேட்டன்று. சிற்றடி - தாவடி யோட்டு- பட்ட தன்றோ. (பொ.உ) மாவலிச் சக்ரவர்த்தியிடம் (மூவடி) மூன்றடி (படி) மண்கொடு என்று கேட்டு, (அன்று) அந்நாள் (மூது அண்ட கூட முகடு) பழமையாய் நிற்கும் அண்ட கோளத்தின் மேற் கூறை முட்டும்படியாகத் தனது சேவடியை செவ்விய அடியை (விசுவரூபம் எடுத்து) நீட்டின பெருமான். திருமாலின் மருகனாகிய முருகனது சிறிய திருவடியானது (தாவடி யோட்டும்) பிரயாணத்துக்கு (அல்லது போருக்கு) ஒருப்பட்டு, ஒட்டப்படுகின்ற மயில்மீதும், தேவர்களின் தலைமீதும், என்னுடைய பாடல்களின் அடிகளைக்கொண்ட ஏட்டுப் புத்தகத்தினுள்ளும் பட்டுள்ளது பதிந்துள்ளது. (சு-உ) மண் மூவடி அளந்த திருமாலின் மருகன் முருகன் திருவடி மயில்மீதும், தேவ்ர்கள் தலைமீதும், என் பாடற் புத்தகத்திலும் விளங்கிற்று -- o (கு.உ) தாவடி= பிரயாணம், "கடிதுல கெங்கலுந் தா(வடி யிட்டு வந்த மயில்" -திருப்புகழ் 567 தாவடி = போர், பயணம், தாண்டுகால் "மாவலி வேள்வியில் மானுருவாய்ச் சென்று மூவடிதா என்று இரந்த இம்மண்ணினை ஒரடியிட்டு இரண்டா மடிதன்னிலே தாவடியிட்டானால் இன்றுமுற்றும்