பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (3) தும்மலினால் மரணம் அடைந்தார் என்னும்படி அவ்வளவு நிலையாமையை இவ்வாழ்க்கை பூண்டிருப்பதால்தான் "துமிக் குமர சரணமென்னிர்-என்றார் 97ஆம் பாடலில் 60. ஈதற் சிறப்பு செப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னஞ் செல்வர்க்கிடச் செப்பத் தமதிலை யெங்ங்ணுய் வார்தெய்வ வேழமுகன் செப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச் செப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே (ப-உ செப்ப-நடுவுநிலைமையால், தமது தங்களுடைய, இலைஇல்வாழ்க்கைக்குரிய மனைவியையும், மாற்றார் - பகைஞர்கள், கொளுமுன்னம் - கைப்பற்றிக்கொள்ளு முன்னமே செல்வர்க்கு ஐசுவரியவான்களுக்கு இட (வறியோர்க்கு) இட்டுண்ண, செப்பு சிவந்த அத்தமது கையானது, இலை இல்லையாயின், எங்ங்ன் - எப்படி, உய்வார்-பிழைப்பார்கள்,தெய்வ. தெய்விகமாகிய,வேழமுகன் - யானைமுக விநாயகரால், செப்பு - புகழப்பட்ட, அத்தம (அவரது) தம்பியே! திலை - சிதம்பர நடேசரான, வாள் - ஒளிபொருந்திய நுதல் நோக்கினர் - நெற்றிக்கண்ணை யுடையவரும், சேணில் ஆகாசத்தில், வெள்ளி-வெள்ளியும்,செப்பு-செம்பும்,அத்த-பொன்னுமான மதிலைமதிலையுடைய திரிபுரத்தை வென்றார் செயித்தவருமாகிய பரமசிவனது, குமார மைந்தனே! அத்திக்கு தெய்வயானை நாயகிக்கு அரசே - தலைவனே! (எ று) செல்வர் - தோன்றா எழுவாய், எங்ங்னுய்வார்-பயனிலை.ஏ-அசை, (க.உ) கணபதிக் கிளையோனே! பாலலோசனருந்! திரிபுரதகனருந் தில்லை நடேசருமான பரமசிவனதுமைந்தனே, தெய்வயானை நாயகனே! செல்வமுடையார் அஃது நிலையாமை யென்றறிந்தும் அதனால் நல்லறஞ் செய்யாதிருப்பாராயின் எப்படிக் கடைத்தேறுவார்கள். (கு.உ) (1) திரிபுரத்து மதில்கள் வெள்ளி, செம்பு, பொன் என்றார்-இரும்பு,வெள்ளி,பொன் எனப் பிறநூல்கள் கூறும். மயன்தான் மகிழ்ந்திரும்பு வெள்ளி பொன்னால் மனையவர்க்குச் சமைத்தான்" - ஞானவரோ - உபதேசம் -2036.