பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 213 மறந்துவிட்டாய் என்று → கூறினர் . ஆதலால் இப்பாடலை நல்ல எலுமிச்சம் பழப் பாட்டு எனக் கூறுதல் வேண்டும். அருணகிரிநாதர் தம்மைக் காண வேண்டிச் செலுத்தின ஓர் படிமக்கலம் (காணிக்கை எலுமிச்சம் பழம்) என்று இறைவன் கருதினார்போலும் இறைவன் அங்ங்னம் குறித்தவிவரத்தைப் பின்வரும் பாடலிற்காண்க; சந்நிதியில் நின்று புகழ் ஆந்தாதி பாடுந் தருணத்தில் அந்தாதியில் தனிமலைக் குரியதாஞ் சேர்ப்பது மாலெனத் துவக்குந் தனிப்பாடலை அந்நிலையில் ஒதுதற் கடியேன் மறந்திடலும் அன்றிரவில் என் கனவிலே அண்டிஒரு விப்பிரச் சிறுவனாய்த் தோன்றி, உடை அங்கம் ப்ரகாசமாக நன்னிறத் தேகத்தில் வெண்ணிறத் திருநீறு நன்றொளிர எதிரில் நின்று நல்லஎலு மிச்சம் பழமொன்று கத்தரந் தாதியில் மறந்தனை என, என்னெதிரில் நிற்குநீ சிறுவனலை முருகனே என்றுரைத் தியான்பிடிக்க எழுமுனே சிறிதோடி, திருவுரு மறைந்தமுரு கேச தனி கேச இறையே (2) ஐ அவத்தை - பஞ்சாவஸ்தைகள் - சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் (1) சாக்கிரம் - விழிப்புநிலை ஆன்மா புருவ மத்தியில் நின்று, தத்துவங்களுடன் கூடி, விஷய நுகர்ச்சியில் மெத்தென நிற்கும் நிலை, (2) சொப்பனம் - கனவு நிலை - ஆன்மா கண்டத்தில் நிற்க, மனம் வேலை செய்துகொண்டும், இந்திரியங்கள் பத்தும் தொழிலின்றியும் உள்ள நிலை. (3) சுழுத்தி (மனமும்) புலன்களும் செயலற்று உறங்கும் நிலை, (4) துரியம் - ஆன்மா உந்திப் ப்ரதேசத்தில் பிராணனோடு லயித்து நிற்கத் தன்னையே விஷயீகரிக்கும் நான்காம் ஆன்ம நிலை,-யோகியர்தன்மயமாய் நிற்கும் உயர்நிலை - துரிய நிலையே கண்ட முத்தர்" திருப்புகழ் 148. (5) துரியாதீதம் மூலாதாரத்தில் ஆன்மாதங்கி அவிச்சை மாத்திரையை விஷயீகரிக்கும் ஐந்தாம் ஆன்மநிலை ஆன்மா மிகத் தூய்மையாய் நிற்கும் நிலை.