பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை 74. துதி சேரப் பொருப்பட வித்தே னிறைவன் றிரைசிறையைச் சேரப் பொருப்பட வல்லவன் ஆரைச் சிகரியுடன் சேரப் பொருப்பட வென்றண்ட ரேத்திய சேவகன்வான் சேரப் பொருப்பட வேணியிற் சேர்த்தவன் செய்தவமே, (ப-உ) சேர சேர ராசனது, பொருப்பு - கொல்லிமலைச் சாரலையும் வெள்ளிமலைச் சாரலையுமுடைய, அடவி - வனத்தில் வாழ்கின்ற,தேன்-தேன்மொழியையுடையவள்ளிநாயகிக்குஇறைவன். காதலனே திரை-அலையானது,சிறையை-கரையை சேர்-அழியும்படி, அப்பு - மோதுகின்ற, ஒர் ஒப்பற்ற, உப்பு - உவர்க் கடலை, அட வற்றும்படி வேல்விட்ட வல்லவன் - வல்லவனே! சூரை - சூரனை, சிகரியுடன் - கிரவுஞ்சகிரியுடன், சேர - அடியோடு, பொரு போர் செய்து, பட அழியும்படி,வென்று-செயித்து,அண்டர் தேவர்களால், ஏத்திய துதி செய்யப்பட்ட சேவகன் - வீரனே! வான் சேர் அப்பு - ஆகாய கங்கையை, ஒருப்பட ஒன்றாக வேணியில் சடையின்கண், சேர்த்தவன்-அடங்கித்தரித்த பரமசிவன்,செய்தவமே-செய்தவமாகிய மைந்தனே! (எ-று) (க.உ) கொல்லிமலை வெள்ளிமலைச் சாரலையுடைய வனத்தில் வாழ்கின்ற வள்ளிநாயகிக்குக் காதலனும், சமுத்திரத்தை வேலால் வற்றும்படி செய்தவனும், சூரனையுங் கிரவுஞ்சகிரியையும் நிர்மூலமாக அழித்துத் தேவர்களால் துதிக்கப்பட்டவனும், கங்காதரராகிய பரமசிவன் செய்தவமென்னு மைந்தனுமாகிய குமாரக்கடவுளே! (கு.உ) (1) வள்ளி வாழ்ந்த வள்ளிமலை தொண்டை நாட்டில் இருப்பதால்-சேரப் பொருப்பு-என்பதற்குச் (சேர்)-திரட்சி-செறிவுகொண்டமலை (வள்ளிமலை)எனப்பொருள்காணலாம். சேரர் மலையான கொல்லிமலை, வெள்ளிமலை (வெள்ளி. யங்கிரி) போன்றவள்ளிமலை-எனவாவதுகொள்ளவேண்டும் (2) கடல் சுவற வேல் விட்டது - செய்யுள் 45 கீழ்க்குறிப்பைப் பார்க்க (3) சூரைச் சிகரியுடன் - என்றதனால் - சிகரி கிரவுஞ்சகிரியைக் குறிக்காது எழுகிரியையே குறிக்கும் எழுகிரியை அட்டது - திருப்புகழ் 257 பக்கம் 140 கீழ்க்குறிப்பு.