பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (ப-உ) தென் - வண்டுக ளிசைபாடுகின்ற, தலை - சிரசின் கண், அம்பு - கங்கையை, புனைவார் - அணியும் பரமசிவனது, குமார மைந்தனே திமிர இருணிறமுடைய, முந்நீர் - கடல் சூழ்ந்த தென் அழகிய, தலை பூதேவிக்கும், அம்புயம் - செந்தாமரைப் பூவில் வாசஞ்செய்கின்ற, மின் - சீதேவிக்கும், கோ - நாயகனாகிய திருமாலினது, மருக-மருகோனே! செழு-செழுமை தங்கிய, மறை தேர் - நான்கு வேதங்களும் துதிக்கின்ற, தென்றலை - தெற்கின் கண்ணதாகிய, அம் - அழகிய, புசக - பாம்பு போன்ற, பூதர - திருச்செங்கோட்டு மலையதிப்னே எரி-அக்கினியை, சிந்தி-கொட்டிக்கொண்டு, மன்றல் வாசனை தோய்ந்த, தென்றல் - தென்றற் காற்றானது, ஐயம்பு - என் தேகத்தில் மன்மதனது பஞ்சபாணங்களும், படு - தைத்த நெறி - புண்வழியே, போய் - நுழைந்து, உயிர் - என்னுயிரை, தீர்க்கின்றது . (வருத்தி) நீக்குகின்றது. (எறு) தென்றல் - எழுவாய் தீர்க்கின்றது பயனிலை.ஏஅசை (க-உ) கங்கையைச் சூடிய பரமசிவனது மைந்தனே! பூதேவி சீதேவிகளின் நாயகனான திருமால் மருகோனே!வேதங்கள் துதிக்கின்ற பாம்புபோன்றதிருச்செங்கோட்டுமலையில் வாழ்பவனே காம பாணந் தைத்த புண்வழியே தென்றற்காற்று என்னுடலில் நுழைந்து உயிரை வருத்துகின்றது. இச்செய்யுள் - காமமிக்க கழிபடர்-கிளவி என்னும் துறையது, செய்யுள் (40)ம் பார்க்ககழி படர்-மிக்கநினைவாலுண்டாகியதுன்பம், படர்-துன்பம் கிளவி-தன்லவியின் சொற்கள். தென்றல் -ஐ அம்பு படுநெறிபோய் உயிர் தீர்க்கின்றது என்பது காமமிக்கார்க்குத்தென்றல் தரும்வேதனையைக் காட்டுகின்றது: 'வன்றிறற் கொலைஞர்கள் மானிற் கூவி மான் ஒன்றறக் கவர்தல்போல் உயிரென் காலினை இன்றது போலவந் துள்புக் கீர்த்ததால் தென்றலுக் கியான்செய்த தீதுண்டோ என்பான் எனவரும் கந்தபுராணச்செய்யுள் (குமாரபுரிப்படலம்47) "ಇಟ್ಠg) நினைவுக்கு வரும்; இவ்வாறே கடல் முதலியவற்றைக் குறித்தும்நோதல் உண்டு; உதாரணம்." 'பெருவெங் கடலே எனைநீ இரைந்திங் கடலே". கோடீச்சுரக்கோவை,230, (2) கங்கைசூடுதல்-செய்யுள் 74கி.ழ்க்குறிப்புப் பார்க்க;