பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 249 கான்யாற்றையுடைய, வனோற்பவை - வனத்திலுற்பவித்த வள்ளிநாயகிக்கு அரசு - தலைவனான குமாரக்கடவுள், இந்திரியச்சேலை - பஞ்சேந்திரியச் செய்கைகளை, இலார் - நீக்கிய தபோதனர்கட்கும், உம்பர்-தேவர்கட்கும், ஆப துன்பத்தை விளைத்த ரிபு சத்துருவாகிய சூரனை, குற-குற்றும்படி, சிக்கெனும் இறுக்கிக் கட்டிய, இச்சேலையில் - பீதாம்பரக் கச்சையில், ஆரும் மாதர்களெல்லாம், திறையிட்டனர் - கப்பமாகச் சமர்ப்பித்தார்கள், தங்கள் - தங்கட்ங்கள், சித்தங்கள் இருதயங்களை (எ நூ) ஆரும் எழுவாய். திறையிட்டனர்-பயனிலை.ஏ-அசை (க-உ) சம்பந்தப் பிள்ளையா யவதரித்துச் சமணர்களைக் கழுவேறும்படிச் செய்தவனும், வள்ளிநாயகிக்குத் தலைவனுமாகிய குமாரக்கடவுள் தேவர் முதலியோரை வருத்திய சூரனை வெல்லும்படி யழகிய அரையிற் கட்டிய பீதாம்பரக் கச்சையினிடத்தில் மாதர்களெல்லாருந் தங்கள் தங்கள் இருதயங்களைக் கப்பமாகச் சமர்ப்பித்தார்கள். (கு-உ) (1) சேலை இல்லார் - அசோக மரத்தை இடமாகக் கொண்ட அமணர்கள். பின்டி யேன்று பெயரா நிற்கும்- சமணரும்' சம்பந்தர் 170.10, (2) சமணர் கழு ஏறினது - வரலாறு - திருப்புகழ் 181, பக்கம் 422 கீழ்க்குறிப்பு:அந்தாதி29ன்குறிப்பையும் பார்க்க (3) உந்திவனோற்பவை-செய்யுள் 48ன்குறிப்பைப் பார்க்க (4) சேலை - பீதாம்பரக் கச்சை "கந்தவேள் மருங்கிற் சேலையும்". கந்தர் அலங்காரம் 27, திறையிட்டனர்-இந்நூலின் காப்புச் செய்யுள்1ன் குறிப்புரை காண்க (5) திறைகொள்ளுதல்-கப்பம் வாங்குதல்-கவர்தல் முனிவரையும் சித்தந் திறைகொள்ளும் செவ்வாயாள் ஞானவுலா-வரி-361. மாதர்கள் தங்கள் இருதயங்களைக் கப்பமாகச் சமர்ப்பித்தனர் என்றதனால் - மாதர்களின் உள்ளங் கவர்ந்தார் இறைவர் என்க 'வெள்ளைக் கலிங்கத்தர். என் உள்ளம் கவர்வரால்" திருவாசகம் - அன்னைப்பத்து7. -