பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 19 இல்லாததும், (சூதானதற்ற), வஞ்சகம் ஒன்றும் இல்லாத சுத்த ፴፫ வெளியில் மறைந்திருந்து (சுத்த மவுன நிலையில் நிலைபெற்றிருக்க (மனமே இனிபோதாய்) மனமே! }னி முயன்று செல்வாயாக; (உலகத்தவர் யார்க்கும்) இந்த நிலை தெரியாது. (சு-உ) மனமே! முருகன் திருவடியைத் துணை. யாகக்கொண்டு மெளன நிலையில் இருப்பாயாக இந் நிலை உலகோர்க்குக் கிட்டுதல் அரிது. = (கு.உ) வெட்சி மலர் முருக பிரானுக்குகந்தது வெட்சி மலர் நின்னிரு கழற்கால்" கல்லாடம் வெட்சித்தன்டைக் காலென் லை 30 ஒரு பூதரும் அறியாத் தனி வீட்டில் உரை உணர்வு அற்று இரு (45) - எனப் பின்னர் வரும் இடத்தும் காண்க அல்லும் பகலும் இல்லா - வெளி - இரவு பகலற்ற இடம் எனதற இருக்கைப்ரியோகப் புராதனன்" - வேடிச்சி - வ்குப்பு இரவு பகலில்லா இன்ப வெளியூடே விரவி விரவி நின் 3.பற’ திருவுந்தியார் 20 ஒரு பூதரும் அங்கறியாவகை அஷ்டப் திருவரங்க * - மா. 62 18. உலகுக்கு உபதேசம் 'வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி ‘வறிஞர்க்கென்றும் நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ங்ண் ‘வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற் ‘கையி ற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே (பொ.உ) (வையில்) கூர்மையைத் தன்னிடம் கொண்டதும் (கதிர்) ஒளியை உடைய (வடி) உரு உடையதுமான வேலை ஏந்தும் முருகன்ை வாழ்த்தி, (வறிஞர்க்கு) ஏழைகளுக்கு (என்றும்) எந்நாளும், ஒரு நொய்யின் பிளவு அளவேனும் கொடுத்து உதவுங்கள் (நுங்கட்கு) உங்களுக்கு (இங்கன்) இங்கு - இப் பிறப்பில் - வெய்யிலுக்கு ஒதுங்குவதற்குக்கூட நிழல் தந்து உதவாத உடம்பின் (வெறு நிழல்போல்) உதவியற்ற நிழல் போல (உங்கள் கையில் உள்ள் பொருள்கூட (தும் கடைவழிக்கு உதவாது காண் (உங்கள் கடைநாள் வழித்கு இறந்து பின் செல்லும் அவ்வழிக்கு உதவாது) - இதைத் த்ெரிந்து கொள்ளுங்கள். (சு உ) இறந்த பின் உங்கள் செல்வப் பொருள் ஒன்றும் உங்களுக்கு உதவாது. ஆதலால் வேலனை வாழ்த்தி இயன்ற அளவு ஏழைகளுக்குத் தானம் செய்யுங்கள். (கு உ) 1 வை = கூர்மை 2 கதிகேள் கரவாதிடுவாய்" கந்தர நுபூதி 7, 3 வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்" என்பது இவ்வுடம்பு எதற்கும் உதவா தென்பதை விளக்கிற்று;