பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை 92. புதல்வன்மேல் வைத்து அணைந்தவழி ஊடல் சேடி வணங்கு வளைத்தோ ளெனப்புணர் சேயவட சேடி வணங்கு திருத்தணி காவல நின்செருக்காற் சேடி வணங்கு கொடியிடை யாரையென் செப்புமுலைச் சேடி வணங்கு தலைக்களி ரீந்தது செல்ல நில்லே. (ப-உ) சேடு-அழகியதாகும், இ-இந்த அணங்கு மங்கையினது, வளை - வளையலணிந்த தோள்என தோளென்று மிகவு மகிழ்ந்து, புணர் - முன் வேண்டினகாலத்து என்னை மணம் புணர்ந்த சேய - முருகனே வடசேடி - வடக்கின் கண்ணதாகிய விஞ்சையருலகம், வணங்கு வழிபடத்தக்க திருத்தணி - திருத்தணிகைக்கு காவல தலைவனே! நின் நினது, செருக்கால் - செருக்கினால், சேடி - கர்வித்திருக்கின்ற, வணங்கு - துவளாநின்ற, கொடி - கொடிபோன்ற, இடையாரை-இடையையுடைய பரத்தையரை, என் செப்பு- நிந்தித் துப் பேசவேண்டியகாரணமென்ன இருக்கின்றது, முலைச்சேடு - எனது கொங்கையின் திரட்சியை, இவனம் - இப்படி திரட்சியின்மை யாகும்படி, குதலை - மழலைச் சொல்லையுடைய, களிறு - என் பாலன், ஈந்தது - தந்துவிட்டது. (ஆதலால்) செல்ல - என்னிடத்து வராமற் செல் லும்படி, நில்-தூரமாக நில்லு.(எறு)நீ-தோன்றா எழுவாய்;நில்பயனிலை.ஏ-அசை (க.உ) தணிகைமலையில் வாழ்வோனே பண்டென்னை மிகவும் அழகுடையவளென்று மணம்புணர்ந்த சேயோனே! நீ இப்பொழுது கலந்த களிப்பான் மிகுதியடைந்த பரத்தையரை யான் நிந்தித்துப் பேசவேண்டிய காரணமென்ன இருக்கின்றது; எனது யெளவன பருவத்தை யிம்மழலைச் சொல்லையுடைய பாலன் வேறுபடுத்தினனாதலால் அப்பரத்தையர்பாற் றானே செல், என்பால் வரவேண்டியதில்லை. (கு.உ) (1) இது அணைந்தவழி ஊடல் என்னும் அகப்பொருள் துறையது. * தெளிபுண லூரன் சென்றணைந்தவழி ஒளிமதி துதவி ஊடி உரைத்தது - (திருக்கோவை 390 - பரத்தையிற் பிரிவு . தலைவி உணர்ந்து தலைவனோடு புலத்தல்' என்னும் பகுதி.இதுபோன்ற கருத்தை