பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 255 பண்கா னுறுமென் மொழிப்பங்கர் வெங்கைப் பனிவரையாய் கண்கா தளவுமக் காதேந் திளமுலை காறுமுள பெண்கா ணெனமுன் புரைத்தது நீபெறும் பிள்ளைசுவைத் துண்கால மென்முலை நுண்ணிடை காறு முளையென்றதே எனவரும் திருவெங்கைக்கோவை(393)யிற்காண்க (2) வடசேடி வடசேடி தென்சேடி என்பன வித்தியாதரர். களுடைய மலையாகிய வெள்ளியம் பெருமலையில் உள்ள பெரும் பிரிவுகளின் பெயர்கள்.இதனை "நுங்கள் வடசேடி தென்சேடியந் தவிர ராச ராசபுரி புகுதுமாதர் கடைதிறமினோ விஞ்சை மன்னர் பாழ்வெள்ளி வெற்பு என வருமிடத்துக் காண்க (தக்கயாக்ப்பரணி 19,371-விசேடக்குறிப்பு-பக்கம்:265 பார்க்க) வெள்ளியம் பெருமலை யொழியவந்து ஈண்டினர். விஞ்சையர்' (சிந்தாமணி2361), வெள்ளிவெற்பின் விஞ்சையர்க்கிறைவர்'(நைடதம் - சுயம்வர - 128); இருசேடியுடன்கொண்ட வேதண்ட லோக விமலையரும்--ராஜராஜசோழனுலா. வட்சேடி வணங்கு திருத்தணி காவல தணிகாசலனைத் தினம். பண்ணமர் விஞ்சையர் கின்னரர் . தாவிலராய்ப் புறங்காவலராவரே - தணிகைப் பிள்ளைத்தமிழ் காப்பு -10 கின்னரரும் சித்தவித்யாதரரும் நெருங்கிவர-தணிகையுலா 213 93. விரக தாபம் செல்லலை யம்பொழில் சூழ்செந்தி லானறி யானிறைகைச் செல்லலை யம்பொழி லெங்கணு மேற்ப வெனத்தெறித்த செல்லலை யம்பொழி லங்கைக் கருடிரு மானிறம்போற் செல்லலை யம்பொழி லாகவ மாதுயிர் சேதிப்பதே. (ப-உ) செல் - மேகத்தை அலை - அசைக்கின்ற, அம் - அழகிய, பொழில் சூழ் - சோலை சூழ்ந்த செந்திலான் திருச்செந்திற்பதியையுடையவன், அறியான் - அறிகின்றானில்லை; இறை - பரமசிவனது, கை கரத்தில், செல்லல் - போகாதே ஐயம் - பிச்சைக்கு பொழில் எங்கணும் - உலகமெங்கும், ஏற்ப இரக்கும்படியாய், என என்று, தெறித்த - தமது இரத்தத்தைப் பிரமகபாலத்திற் றெரித்தவரும், செல்லல் - துன்பத்தையும், ஐயம்