பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை பயத்தையும், பொழில் பெருமையுடைய, லங்கைக்ரு இலங்காபுரிக்கு அருள். உண்டாக்கினவருமாகிய, திருமால் ரீராமரது நிறம்போல் - நீல்நிறத்தைப்போல,செல்-நடக்கின்ற,அல்-இராக்காலத்தில்.ஐயம்புமன்மதனது பஞ்சபாணமானவை, ஒழி - அழியும்படி, லாவகம் - மிகவு நொய்யதான, மாது உயிர் - மங்கையினுயிரை, சேதிப்பது வதைக்கின்றதை (எறு) செந்திலான் - எழுவாய், அறியான் பயனிலை ஏ-அசை, (க-உ) பரமசிவனது கையிலிருக்கின்ற பிரமகபாலத்தில் தமதிரத்தத்தைப் பலியாக வார்த்தவரும், இலங்காபுரியைச் செயித்தவரும்ான விஷ்ணுவின் நிறம்போ லிருண்ட இராக்காலத்திற் காமபாணங்கள் இம்மங்கையி னுயிரைப் பிளக்கின்றதைச் செந்தினாயகன் அறியானோ? (கு.உ) (1) சிவனது (வடுக மூர்த்தியின்) பிரமகபாலத்தில் திருமால் தமதுரத்தத்தைச் சேர்த்தது:-வரலாறு- திருப்புகழ் 706, பக்கம் 130கீழ்க்குறிப்பு:கந்தபுராணம் 6.13.167-168 திருமாலின் செருக்கை அடக்க ரத்த பிகூைடிக்காக அவரிடம் வந்த வைரவருக்கு அஞ்சித் திருமால் தமது மத்தகத்தைப் பிளந்து வைரவர் கையிலிருந்த பிர்மகபாலத்தில் தம்து இரத்தத்தை நெற்றி நரம்பின் வழியே ஒழுகவிட்டார். கபாலம் பாதிகூட் நிரம்ப இல்லை. திருமாலும் மூர்ச்சித்து விழுந்தார். பின்னர், வைரவரின் திரு அருளால் தெளிவுற்று எழுந்தார். உரிய நற்பலி நான் உதவுவன் என்ன. கரியவன். குருதிநீர் அருவிபோல நின்றொழுக. கபாலம் பாதியும் நிறைந்திலதன்றே. கூர்ம புராணம். (சிவபராக்ரமம் - ரத்த பிக்ஷாடன பராக்ரமம். உளைந்தான் செறுதற் கரியான் தலையை உகிரொன்றினால் களைந்தான் அதனை நிறைய நெடுமால் கனார்குருதி வளைந்தான் ஒருவிர லின்னொடு வீழ்வித்து - - அப்பர் 4-84-7. இறையான் கையில் நிறையாத முண்டம் நிறைத்த எந்தை' பெரிய்திருமொழி -5-1-8.