பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 257 மூளையார் சிரத்து ஐயம்முன் அளித்த எம்முகில் வண்ணன்பெரிய்திருமொழி 428 (2) ராமர் - அஞ்சன வண்ணத்தான் - கம்பராமாயணம் அகலிகை 85 (3) மன்மதனது பாணம் ஐந்து - திருப்புகழ் 19, பக்கம் 60 கீழ்க்குறிப்பு 94. யமனைச் சேதிக்க சேதிக் கனைத்து களதாக்கு நோக்கினன் செல்வசெந்திற் சேதிக் கனைத்து நிலைபெறச் ஆரங்கஞ் சீரங்கமால் சேதிக் கனைத்து வரிதோ யயில்கொடெற் சேர்க்கவந்தாற் சேதிக் கனைத்து வருமா மறலி திறலினையே. (ப-உ) சேது சிவந்த இக்கனை கருப்பு வில்லையுடைய மன்மதனை, துகள்தாக்கும் - சாம்பலாகும்படி யெரித்த நோக்கினன் நெற்றிக்கண்ணையுடைய பரமசிவனது,செல்வமைந்தனே'செந்திற்சேதிருச்செந்தூர் முருகனே திக்கு அனைத்தும் திசைகள் எல்லாம், நிலைபெற-நிலைபெற்றிருக்கும் படியாயும், சூர் சூரனுடைய, அங்கம் உடலை, சீரங்கம் - திருவரங்கத்தில் வாசஞ் செய்கின்ற, மால் விஷ்ணுவினது, சே - பிள்ளையாகிய பிரம்மர் திக்க திகைத்கும்படி, நைத்து-அழித்து, உவரி-சமுத்திரத்தில், தோய் மூழ்கிய அயில்கொடு வேலாயுதத்தைக்கொண்டு, எற்சேர்க்க வந்தால் - என்னை யமபடர்கள் கட்டிக்கொண்டு - போகவந்தால், சேதி கண்டிப்பாயாசு, கனைத்து வரும் . கனைத்துக்கொண்டு வராநின்ற, மா மறலி - பெரிய யமனது, திறலினை - உக்ரவல்லமையை (எ று) நீ தோன்றா எழுவாய், சேதி பயனிலை.ஏ-அசை (க.உ) கருப்பு வில்லையுடைய மன்மதனை யெரித்த நெற்றிக் கண்ணையுடைய பரமசிவனது மைந்தனே திருச்செந்திற் பதியில் வாழ்கின்ற சுவாமியே! என்னைக் கட்டிக்கொண்டுபோகவரும் யமனது வலியைப் பிரமன் - திகைக்கவும், திக்குக்களெல். லாம் நிலைபெறவும், சூரனை வென்று சமுத்திரத்தில் தோய்ந்த வேலாயுதத்தினால்ே நீ சேதிக்கவேண்டும். (கு.உ) (1) கருத்துரையில் வசன அமைப்பு பின் வருமாறு அமைந்திருக்கவேண்டும். o