பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (க-உ) சிற்றுமியும் ஈயாமல் மரம்போன்றிருப்பவர்களே! நீங்கள் பிழைப்பதெப்படி நீர் தும்முங்காலையிலாவது தினைப்புனத்தின்கண் வள்ளியம்மையினிடத்துத் தமது மரபை யோதி நின்றவனும், கண்ணப்பநாயனார் நிவேதித்த எச்சிலையினிதாகக் கொண்ட பரமசிவன் மைந்தனுமாகிய கந்தஸ்வாமியின் திருவடியைக் கருதிக் குமரனே சரணமென்பிரானாற் பிழைப்பீ ர்கள். உமி - தவிடு அளவேனும் பகிர மனம் வராமை அணு (1) (ربع - زG) அளவு தவிடு உமிகள் பிதிரவிட மனமிறுகி திருப்புகழ் 862 கீழ்க்குறிப்பு:பாடபேதம் (2) மரம் நிகர்த்தல் -உணர்ச்சியற்று இருத்தல். "மண்னோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகனன் னோடா தவர்" - திருக்குறள் 576. 'மரமனையா னுக்கிந்த மானை வகுத்த பிரமனையான் காணப் பெறின் - ஒளவையார் தனிப்பாடல். (3) ஒரு தும்மல் தும்மும்போதும் முருகன் திருவடியை நினைத்துக் குமர சரணம் என்று சொல்லுங்கள், உய்வீர்கள் என்று அருணகிரியார் நாம் கடைத்தேற உபதேசித்துள்ள அருமை உபதேசம் இது யாவரும் எளிதிற் கையாளக் கூடியது, பழங் காலத்தில் தும்மின உடனே "சிவாய" எனக் கூறும் வழக்கத்தை மக்கள் கையாண்டு வந்தார்கள். 'இறைவன் உதலினன் இரங்கித் தும்மினார் சிவாய' போல் தொடர்ந்து"-திருஆலவாயுட்ையார் திருவிளையாடல் 49-விடைக்குறி 10. (4) வள்ளிக்கு முருகவேள் தனது மரபு உரைத்தது, வள்ளியின் காதலைவிரும்பி, மெல்லியல் வருதியால், விண்ணின் பால்வரும் வல்லியர் யாவரும் வணங்கி வாழ்த்திடத் தொல்லியல் வழாவளம் துய்ப்ப நல்குவேள் - கந்தபுராணம் 6-24-88. - என முருகவேள் தமது உயர்நிலை மரபை வள்ளிக்கு விளங்க உரைத்தார். (5) கண்ணப்பரின் எச்சிலை சிவபிரான் உண்ட வரலா ԱԱ/ திருப்புகழ் 651, பக்கம் 526 கீழ்க்குறிப்பு.