கந்தாந்தாதி 263 எங்ங்ணம் அன்புக்கு ஈடுபட்டுக் கண்ணப்பரின் எச்சிலை தந்தையார் உண்டாரோ அங்ங்ணம் பிள்ளை முருகனும் அன்புக்கு ஈடுபட்டு, வள்ளியின் பேச்சுக்கு உருகி அவளிடும் பணிகளைச் செய்யக் காத்திருந்தனர். குறப்பெண் குறிப்பறிந்து, அருகு அணைந்து, உன் குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக் றயிரந்து, அவள் 蠶 தேனுாறு கிளவிக்குவாயூறிநின்றவன்-முத்துக்குமர. ள்ளைத்தமிழ்-செங்கீரை 5. 98. வினையற சீரங்க ராக மறமோது திகிரி செங்கைகொண்ட சீரங்க ராக மருகந்த தேசிக செந்திணைமேற் சீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ் நூற் சீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே. (ப-உ) சீரம் - கலப்பையையும், கரா - முதலையினது, கம் - தலையை, அற-அறும்படி,மோது-அமர்செய்ததிகிரி-சக்கிரத்தையும், செம் - சிவந்த கை - கரத்தில், கொண்ட தரித்திருக்கும், சீரங்கர் - திருவரங்கத்தையுடைய திருமாலும், ஆகமர் - ஆகம வேதத்தையருளிய பரமசிவனும், உகந்த விரும்பத்தக்க தேசிக அழகனே! செம் - சிவந்த தினைமேல்-தினைப்புனத்தில் வாழும்,சீர்-சிறந்தவள்ளிநாயகியினது, அங்கராக சாந்தணிந்த தனகிரி-தனமாகிய மலையை,தோப்- தழுவிய, கந்த குமாரக்கடவுளே செந்தமிழ் நூல்-செவ்விய தமிழ்ப் பநுவலின், சீரங்க - சீர் முதலிய எட்டுறுப்புக்குரிய பாவலனே ராக விநோத கீதத்தி லுல்லாசனே! என்பார்க்கு - என்று நாடோறுந் துதிக்கின்றவர்கட்குதீவினை இல்லை-கொடியவினைசேராது.(எ-று தீவினை-எழுவாய்.இல்லை-பயனிலை ஏ-அசை (க-உ) கலப்பை யாயுதத்தையும் சக்ராயுதத்தையுமுடைய திருமால் மருகோனே! சுந்தரனே! திணைப்புனத்தில் வாழ்கின்ற வள்ளிநாயகியைத் தழுவுங்கந்தனே! இயலிசைமுதலிய தமிழ் நூற்குரிய விநோதனே என்று துதிப்பவர்கட்குத் தீவினையில்லை. (கு.உ) (1) சீரம்-கலப்பை:இது பலபத்திரன் படைபலபத்திரன்'படையே கலப்பை, கொடிபனையாகும் - பிங்கலம், பலபத்திரன் - பலராமன்.திருமாலின் தசாவதாரத்துள் கண்ணபிரானுக்குமூத்தவராக
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/270
Appearance