உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 265 99. ஞான விளக்கு தீவினை யற்ற சினந்தி ரகத்துண்மெய்த் தீபநந்தந் தீவினை யற்ற வநந்தா தெடுத்தனஞ் செந்தினைமேல் தீவினை யற்ற புனமான் கொழுநன் செழுங்கனகத் தீவினை யற்ற வடியார்க் கருள்பெருஞ் செல்வனுக்கே (ப.உ) தீ - அக்கினியானவன், வினையற்ற தீrண்ணிய மாகத்தகிக்கின்ற தன்செய்கையற்றதுபோல், சினந்தீர் - கோப நீங்கிய, அகத்துள் நமது சாந்த இருதயத்துள், மெய் - உண்மையாகிய, தீபம் - ஞான விளக்கை, நந்தம் தீவினை நம்முடைய தீவினையாகிய, அல் இருளானது.தவ-கெடும்படி,நந்தாது-அவிந்துபோகாமல்,எடுத்தனம்ஏற்றிவைத்தோம்,செம் -சிவந்த தினைமேல்-தினைப்பயிர் விளைவில், தி தீய்ந்து போகும், வினையற்ற செய்கையில்லாத புன - புனத்தில் வாழும், மான் - மான்போன்ற கண்ணையுடைய வள்ளியம்மைக்கு கொழுநன் நாயகனாகிய, செம் - செழுமைதங்கிய, கனகத்தீவினை பொன். மயமாய்ப் பிரகாசிக்கின்ற மோகூவுலகத்தை அற்ற - பாச பந்தங்கள் நீங்கிய, அடியார்க்கு - தமதடியார்கட்கு அருள் . கொடுத்தருள்கின்ற, பெரும் - பெரிய, செல்வனுக்கு அருணிறைந்த செல்வனுக்கு (எ-று) யாம்-தோன்றா எழுவாய்.எடுத்தனம்-பயனிலை ஏ-அசை, (க-உ) வளப்பமிகுந்த திணைப்புனத்தில் வாழ்கின்ற வள்ளியம்மைக்கு நாயகனும், பற்றற்ற அடியார்கட்குமோகூ வுல்கத்தை யளிப்பவனுமாகிய குமாரக்கடவுளுக்கு நமது சாந்த இருதயத் தகழியில் உண்மையாகிய ஞானவிளக்கைஏற்றி வைத்தோம். (கு-உ) (1) பூனி வள்ளிமலை சுவாமிகள் இப்பாடலை மானசபூஜையில் முதலில் தீபம் ஏற்றி வைப்பதற்குக் கூற வேண்டிய பாடலாக உபயோகப்படுத்துவர். ஞானதீபம் ஏற்றிவைத்தல் - அந்தாதி 38ம் உரைக்குறிப்பும் பார்க்க * சினந்தீர் அகத்துள் மெய்த்தீபம்-சினம் ஒழிந்த சாந்த உள்ளத்தில் தான் ஞானம் உதிக்கும் உள்ளம் அடங்குறின் அல்லால். சிவஞானம் நண்ணாது".தணிகைப் புராணம்-இராமன்ருள் 42