பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 முருகவேள் திருமுறை 19 திருமுறை 3. வகுப்புக்களின் ஆற்றல்: (1) சீர்பாத வகுப்பு, ஞானத்தை அளித்து, யமபயத்தை நீக்கி, அருள் நெறியிற் சேர்த்து, வினைப்பகையை அழித்தொழிக்கும் (2) தேவேந்திர சங்க வகுப்பு, பூதம், பிசாசு ஆதிய துஷ்டப் பகைகளையும், யமனையும் வெருட்ட வல்லது (3) வேல் வகுப்பு, எவ்வித ஆபத்தையும் நீக்கி உயிர்த்துணையாய் நிற்பது (4) - (6) வேளைக்காரன் வகுப்பு, வேடிச்சி காவலன் வகுப்பு, புய வகுப்பு இம் மூன்றும் பத்தித் துறையிழிந்து, ஆனந்த வாரியில் திளைத்து நிற்பதற்கு உதவும் துதி வகுப்புக்களாம். (7) வேல் வாங்கு வகுப்பு, போர், பூகம்பம், வெள்ளம், தி ஆதிய பெரிய ஆபத்துக்களினின்றும் நம்மைக் காக்க வல்ல பேராற்றல் கொண்டது. (8) கடைக்கணியல் வகுப்பு, உலகோரை முருகனிடத்தே ஆற்றுப்படுத்தி உய்யும் வழியை எடுத்துரைக்கும் பெருங்கருணை வகுப்பு இது. இதைத் திருவருட் பிரசாத வகுப்பு அல்லது திருமுருகாற்றுப்படை வகுப்பு' எனவும் கூறலாம். இவ்வெட்டு வகுப்புக்களும் பாராயணத்துக்கும் மனப். பாடத்துக்கும் உரியனவாம். (அருணகிரிநாதர் நூலாராய்ச்சி பக்கம் 176.198, 296) சீர்பாத வகுப்பு. தேவேந்திர சங்க வகுப்பு, வேல் வகுப்பு ஆக இம் முதல் மூன்று வகுப்புக்களும் முறையே மணிமந்திர் ஒளவுத வகுப்புக்களாம். 'செனன சஞ்சிதம்மேய, வும்மையே தொடுத் திம்மையே மறுமையே யுயங்கு முப்பவ நோய்க்கு மும்ம்ையேமன்னி, மந்திர, மருந்தென" முகிழும் இவ்வகுப்புக்கள். - அருணகிரிநாதர் வரலாறு பக்கம் 198 பார்க்க 4. பிற குறிப்புக்களை நூலின் இறுதியிற் காண்க - - : Ο : -