பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வேல் வகுப்பு 317 பொழிப்புரை 1. பருத்திருக்கும் முலைகளையும், சிறுத்திருக்கும் இடையையும், இவளுத்திருக்கும்பற்களையும், கறுததருககும கூநதலையும, சிவந்திருக்கு வாயிதழ்களையும் கொண்டவளான (ம்ற்ச்சிறுமி) வேடர் றுமியாம் வள்ளியம்மையின் கண்களுக்கு ஒப்பாகும். (தணிகைக் குகனது வேல்) 2. பனைமரம்போல நீண்டதுதிக்கையைக் கொண்டதும், முகபடாத்தை (முக அலங்காரத்துணியை) அணிந்துள்ளதும், (கரட்ம்) மதம்பாய் சுவட்டினின்றும் வரும் மதநீரைக் கொண்டதும், (தவளம்) வெண்ணிறம் உடையதுமான (கஜ கடவுள்) ஐராவதம் என்னும் யானையை உடைய தேவனாம் இந்திரனுட்ைய (பதத்து இடு) கால்களில் (சூரனால்) இடப்பட்ட (நிகள்த்து) விலங்கு (முளை) கட்டப்பட்டிருந்த முளையை (ஆப்பை)ப் பிளந்தெறிவதற்கு (அரம் ஆகும்) அராவவல்ல யாகும் அல்லது - வரம் ஆகும். விரம்பாலிப்பதாகும் ( கைக் குகனது வேல்) நிகராகும் வேல் என்றார். வள்ளியின் கடைக்கண் நோக்கால் கிடைக்கும் அநுக்கிரகங்கள் யாவும் வேலாலும் கிடைக்கும் என்பது உணரற்பாலது. "தனந்தரும் கல்வி தருமொரு நாளுந் தளர்வறியா மனந்த்ரும் தெய்வவடிவுந் த்ருநெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம்.தரும் அன்பரென்பவர்க்கே கனந்த்ரும் பூங்குழ லாள்.அபிராமி கடைக்கண்களே" - என்னும் அபிராமி அந்தாதியின் (69) பொருள் வள்ளி கடைக்கண் இயலுக்கும் நன்கு பொருந்தும். பின்னும் சம்பந்தப்பெருமான் (3.87-1) மலைமகள். முலையிணையவை குலவலின். எளியிடில் இவை பழுதிலை மெய்ம்மையே என்று பாராட்டிய தி - அணுக - மாட்டாத போக மார்த்த பூண்முலையாள் - எனத் துவக்கும் தேவாரப் பதிகத்தின் (1-49) பெருமையெல்லாம் பருத்தமுலை' எனத்துவக்கும் H = வேல்வகுப்புக்கும் பொருந்தும் என்க. அதுபற்றி இவ்வேல் வகுப்பின் பாராயணத்தால் வெப்பு முதலிய நோய்க்ள் அணுகா என்க. 'யானையின் கையைப் பனைக்கு உவமிப்பது உண்டு 'பனைக்கை மும்மத வேழம் உரித்தவன். அப்பர் 521 'பனைபுரை கைம் மதயானை' - அப்பர் 4.103.6. 'பனைக்கை பதடு. சம்பந்தர் 259-4 பனைமல்கு திண்கை மதமா - கூடி 288-10 "இரும்பன்ையன்ன பெருங்கை யானை- புறநா. 340 (தொடர்ச்சி பக்கம் 318-ல் பார்க்க.)