பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 27 நினைத்தாலும் அப்போதெல்லாம் அழகிய குறத்தி வள்ளி. நாயகியுடன் வருபவனுமான குருநாதன் சொன்ன சீலத்தை குருமூர்த்தி உபதேசித்த உத்தம மொழியைச் சிவயோகிகளே மெள்ளத் தெளிந்தறிவார்) - சிவயோகம் கை வந்த பெரியோர்களே மெதுவாக ஆய்ந்து தெளிந்து அறிவார்கள்; அவர்களே காலத்தை வென்றிருப்பார் - கால தத்துவத்தை பிறப்பிறப்பை வென்றிருப்பார்கள்; (வெறுங் கர்மிகளே மரிப்பர்) ஏனையர், வெற்றுக் கருமங்கள் புரிபவர் இறந்துபடுவர். (சு - உ. சிவயோகிகளே முருகன் உபதேசித்த மொழியை அறிபவர்கள், இறவார்கள்; ஏனையோர் - கர்மிகள் அறியார், இறப்பர். (கு உ) காலம் - வித்தியா தத்துவங்கள் ஏழனுள் ஒன்று; அது சரீராதிகளைப் பரிணமித்து அழியச் செய்வது (ஆசிரியர் திருவிளங்கம் அவர்கள் உரை) சாகா தெனையே சரணங்களிலே காகா (அநுபூதி 41) என்றது சிவயோக நிலையைத் தந்தருள்; அதனால் இறவா நில்ை வரும் என்னும் கருத்தது. எந்த நேரத்திலும் வருவான் என்றது எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந் தெதிர் நிற்பனே' (கந்தர் அலங்காரம் 104) என்னும் கருத்தது. 27. தரிசனர் பாடல் ஒலையுந் தூதருங் கண்டு.திண் டாட லொழித்தெனக்குக் க்ாலையு மாலையு முன்னிற்கு மே கந்த வேள் மருங்கிற் சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்த செச்சை மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே. (அந்) கந்தவேள்-வாகையும் ஒலையுந் தூதரும்- முன்னிற்குமே (பொ - உ) கந்தக் கடவுளின் (மருங்கில்) அறையிற் கட்டியுள்ள (சேலையும்) ஆடையும், கட்டியுள்ள (சீராவும்) உடைவாளும், (கையில்) திருக் கரங்களை அணைந்த (தோளில் அணிந்துள்ள) (செச்சை) வெட்சி மாலையும், கோழிக் கொடியும் (தோகையும்), மயிலும், (வாகையும்) வெற்றிக்கு அறிகுறியாய் நிற்கும் வேலும் . (யமனது) ஒலையையும், (யமனது) துரதர்களையும் பார்த்துத் திண்டாட்டம் அடைதலை நீக்கி எனக்குக் காலையிலும் மாலையிலும் (முன்னிற்கும்) எதிரே தோன்றிக் காட்சி தரும் (சு-உ) முருகவேளின் அரையிற் கட்டிய ஆடை, உடைவாள், வெட்சிமாலை, கோழிக் கொடி, மயில், வேல் இவை எனக்கு யம பயத்தை நீக்கிக் காலையும் மாலையும் என்முன் காட்சி தரும் (கு உ) சேலை = பீதாம்பரக் கச்சை (கந்தரந்தாதி 89); ஆடை