பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை திண்டாடும்படி உன்னையும் விழும்படி செய்வேன்; (வேண்டுமென்றால்) சற்று என் கைக்கு எட்டும்படியான இடத்தில் வந்து பார்ப்பாயாக (சு-உ) முருகவேளுக்குத் தொண்டன் நான்; என்னிடம் அவிரோத 鷺 வாள் உளது; அடா யமனே, உனது தண்டும் சூலமும் கீழே ழும்படி உன்னைத் தாக்குவேன். என் அருகே சற்று வந்து பார். (கு.உ) "படையும் பாசமும் பற்றி கையினர் அடையன் மின்னம தீச னடியரை விடைகொ ளுர்தியி னானடி யார்குழாம் புடை புகாது நீர் போற்றியே j. "நமன்வரின் ஞானவாள் கொண்டே யெறிவன் சிவன்வரி னானுடன் போவது திண்ணம்" - திருமந்திரம் 2968. அவிரோத ஞானம் "எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவ னாதீதம்", "பஞ்சபூதமு நினைவு நெஞ்சு மாவியு நெகிழவந்து நேர்படு மவிரோதம்", "உள்ளது மிலாது மல்லத விரோதம் உல்லச விநோதம்" திருப்புகழ் 1048, 674, 667, 'இறைவன் திருவடியிற் சிந்தை பதிந்த அடியார்களைக் காலனும், கால தூதர்களும் அணுகார்கள்" திருப்புகழ் பாடல் 1178 அடி 1: "பாதம் நினைபவர்க்கும் கால தரிசனை கூடும்' என்பதில் கூடும் என்பதை அச் சொல்லின் ஒசை வேறுபாட்டால் கூடுமா எனத் தொனிக்க வைத்து வினா வாக்கி, கூடாது' என்று விடையாகும் பொருளையும் காணலாம். இங்ங்னம் வினா ஆக்கிப் பொருள் காணுதலை வடமொழியிற் "தாகு" என்பர். திருப்புகழ் பாடிப் பாடி பத்தி பெரிதும் ஊறினநிலையிற் பாடப்பட்டன. கந்தரலங்காரச் செய்யுள்கள்; அதனால் ஆசிரியருக்கு யமனையும் வெருட்டவல்ல தீரம் வந்துளது. - செய்யுள் 21, 64, 69, 81இ 86, 87 பார்க்க அப்பர் 5-92-7. 26. தன் ஆனந்தம் கூறினது நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங் கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே காலத்தை வென்றிருப் பார் மரிப் பார்வெறுங் கர்மிகளே. (பொ.உ) நீல மயில்மீது ஏறும் பெருமானும், எப்போது