பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருவேளைக்காரன் வகுப்பு 341 32 மேவிய மலையிடத்தே இருந்த (புனத்து) திணைப்புனத்து (இதனில்) - பரண்மீதே, (ஓவியம் என) சித்திரப் பதுமைபோலத் (திகழும்) உயிருடன் விளங்கின - உயிர் ஓவியமாம், மேதகு) பெருமை மிக்க குறத்தி) குறப்பெண் வள்ளியுடன் (திருவேளைக்காரன்) - அழகாக லீலைகள் புரிந்து பொழுதுபோக்குபவன். | ஒடக்காரன் (11) திரு ஏரகம், திருவிடைக்கழி, திரிசிராப்ப்ள்ளி, பழநி, திருத்தணி என்னும் தல்ங்களில் வாச்ம் செய்பவன்; (12) எனது உடற் சிறையைத் தொலைத்த நீதிமான்; (13) பார்வதியைத் தாய் என அழைக்கும் சேய்; (14) மனோலயத்தைத் தரும் ஒளி, யாகத்தைப் புரக்கும் காவல்தெய்வம்; (15) தேவச்ேனையின் சைநாயகன்; (16) கடப்பமலர், கூதளமலர் அணிபவன்; ೧), (17) தேவர்கள் பொருட்டுச் சரவணத்தில் அறுமுகனாய் உதித்தவன்; (18) திருமாலின் மருகன் - பிர்மனைக் கோபித்தவன்; (19) வாழி என்று கூறி வணங்குபவர்க்குத் தனது திருவடியைத் தருபவன் (20) குற்றாலம், கதிர்காமம் -என்னும் தலங்களில் தேவர்கூட்டத்தில் விளங்குபவன்; (21) வாசுகி என்னும் பெரும் பாம்பை எடுத்து உதறும் மயிலை உடையவன்; (22) சக்ரவாளகிரியை காலால் இடித் துப் பொடிபடுத்தவல்ல கோழியைக் கொடியிற் கொண்டவன்; (23) உயிர்க்குஉயிராய், உணர்வுக்குஉணர்வாய், அணுவுக்கு அணுவாய் விளங்குபவன்; (24) என் வாசனாமல்த்தைத் தொலைத்த குருமூர்த்தி, பெருங் காட்டில் வெளிப்பட்டு எனக்குத் துணை நின்ற சகாயமூர்த்தி, (25) தமிழ்ச். சங்கப்பலகையில் வீற்றிருந்த விநோதன்; (26) சிவனும் துதிக்கும்படியான ஞானமூர்த்தி (27) கடல் அலற, சூரன் உடல் உருவ, வேலை ஏவினவன்; (28) கிர்த்திகை மைந்தன், தியானிப்பவர்களுக்கு வீட்டின்பம் தருபவன்; (29) பார்வதி. யின் தாய் மேனையின் பேரன், திறல்வீரன், அரக்கர் குலத்தைச் சூறையாடினவன்; (30) வேதியர்களின் செல்வம், பரமாத்மா, விசாகன், பல உருவம் கொள்பவன்; (31) நாரதரின் பேச்சைக் கேட்டு, வேடர்களின் தினைப்புனத்தில் வேற்றுருவுடன் கவலை மனத்தனாய் வில்லேந்திச் சென்றவன்.