பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பூத வேதாள வகுப்பு 355 19. (அலகில்) கணக்கற்ற, திருப்பதியில் - திருப்பதிகளில் (ஸ்தலங்களில்), பயில் - பொருந்திய, (கற்பகாடவி) கற்பகத் தோப்பில் அனுபவன் - மகிழ்ச்சியுடன் வீற்றிருப்பவன், அல்லது (அலகில் திருப்பதி) கணக்கற்ற திருப்பதிகள், இல் பயில் கற்பகாடவி - இல் - இல்லாள் - தேவி - தேவசேனை - பயில் நெருங்கிப் பழகியிருந்த கற்பகவனம் - ஆகிய இடங்களில், அநுபவன் . மகிழ்ந்து வீற்றிருப்பவன், அத்த்ன் - பெரியோன் . (நிருத்தன்) . துடிக்கூத்து, குடைக்கூத்து ஆடினவன், (அரத்த ஆடையன்) சிவந்த உவிெட 20. ஆறு மா மாதர் - அறுவர் எனப்படும் சிறந்த கார்த்திகை மாதர்களின் (பயோதர பந்தியில்) கொங்கைக் கூட்டத்தில் (முலைகளில்), ஆரவே நிரம்பவே, பாலமுதம் (ஆரும்) உண்ட (நெடுந்தகை) பெருந்தன்மை வாய்ந்தவன் (பெரியோன்) 21. (வருணம்) நீர் நிறைந்த சரவணம் என்னும் மடுவிலே, (வரும்) தோன் றிய, ஒரு (மதலை) குழந்தை (மறை) வேதமொழிகள் (கமழ்) மணம் வீசும் குதல்ை மொழியினன்) மழலைச் சொற்களைப் பேசுபவன் - 22. (மதுகராரவம்) - மதுகரங்களின் - வண்டுகளின் (அரவம்) ஒலிகொண்டதும், மந்திரம் - மந்திரமோதிச் சமர்ப்பிக்கப்பட்டதும், சிந்துரம் - செந்நிறம் உடைய தும், மணம் அறாத - நறுமணம் நீங்காததுமான (கடம்பு) கடப்பமாலையை அணிந்தவன் - (அல்லது, சிந் துரம் - வெட்சியையும். கடம்பையும் அணிந்தவன்), 23. மட்டு ஒழுகு சாரம் - ஒழுகு மட்டு சாரம் - வருகின்ற சாறும் ரசமும் (மதுரித்த) . தித்திக்கின்ற தேனைப், (பருக) நக்கி அனுபவிக்க, மர்க்கட சமூகம் - குரங்குகளின் கூட்டம், (அமை) மூங்கிலைத் (தொட்டு) பிடித்தேறி. (இறால்) தேன்கூட்டை (எட்டு) எட்டிப்பிடிக்க முயலுகின்ற (வரை) மலை (யாகிய வள்ளிமலையில்) 12