38 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை உடையது. சேயவன் புந்தி என்னும் கந்தரந்தாதிச் (48) செய்யுளும் இத்தகையது எங்கள் பரமன் உளமே புகுந்த அதனாற் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்களான பலவும் அதிகுணம் நல்ல நல்ல.அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே. சம்பந்தர் 285 39. பிரார்த்தனை ஐக்கிய நிலைபெற 1உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னிலொன்றா விதித்தாண் டருள்தருங் காலமுண் டோவெற்பு நட்°டுரக பதித்தாம்பு வாங்கிநின் 'றம்பரம் பம்பரம் பட்டுழல 9மதித்தான் திருமரு கா மயி லேறிய மாணிக்கமே. (அத்) வெற்புநட்டு.மாணிக்கமே! உதித்தாங்கு....காலமுண்டோ? (பொ உ) (வெற்பு மந்தரமலையை (நட்டு) மத்தாக நட்டு (உரகபதி, நாகராஜனாகிய ஆதிசேடனை (அல்லது வாசுகியை) (தாம்பு) கயிறாய் (வாங்கி நின் று) வளைத்துக் கட்டி (அம்பரம்) கடலை (பம்பரம்பட்டு) பம்பரம் சுழலுவதுபோலச் சுழன்று உழலத் திரியவைத்து, (மதித்தான்) . கடைந்தவனாகிய திருமாலின் (திருமருகா) அழகிய மருமகனே! மயில் ஏறிய மாணிக்கமே (உதித்து) பிறப்பதையும் (ஆங்கு அப் பிறவியில் (உழல்வதும்) அலைச்சல் உறுதலையும் (பின்னர்) (சாதலும்) இறந்து படுவதையும் (தீர்த்து) ஒழித்து (எனை) என்னை (உன்னில் ஒன்றாக) உன்னொடு ஒன்றாகும் வண்ணம் ஐக்கியம் ஆகும் வண்ணம் (விதித்து) நல் விதியை விதித்து (என்னை) ஆண்டு கொண்டு (உனது திருவருளைப் பாலிக்கும் (காலம் உண்டோ) ஒரு காலம் எனக்குக் கிட்டுமா! (சு - உ) திருமாலின் மருகனே! பிறப்பிறப்பை ஒழித்து என்னை உன்னுள்ளே ஐக்கியமாக்கிக்கொள்ளும் ஒருநாள் எனக்குக் கிட்டுமா! (கு உ) இறவியொடு பிறவியற ஏகபோகமாய் நீயுநானுமாய் இறுகும்வகை பர்மசுகம் அதனையருள்" - திருப்புகழ் 362 உரகபதி = வாசுகி, தாம்பு = கயிறு: 'அம்பரம் = கடல்,'மதித்தல் = கடைதல்.கடல் கடைந்த விவரத்தையும், மத்தின் கயிறு ஆதிசேடன் என்றும், வாசுகி என்றும் புராணங்கள் கூறுவதையும் திருப்புகழ் பாடல் 509, பக்கம் 162;ப்ாடல் 100 பக்கம் 24கீழ்க்குறிப்பிற் பார்க்க் பிற்பாதியில் மதித்த மத்தின் சுழற்சி,முற்பாதியில் பிறப்பிறப்பின் சுழற்சி-ஒன்றுக்கு ஒன்று உவமையாம்.
பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/45
Appearance