உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ሓዙሓዞ •' 1ங்கபi {\{} 40. தன் அனுபவம் கூறினது சேல்பட் டழிந்தது. செந்துார் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மணம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே. (பொ உ) (செந்தூர் வயற் பொழில் சேல் பட்டு அழிந்தது) திருச்செந்தூரிலிருந்த வயல் சூழ்ந்த சோலைகள் - சேல் மீன்கள் அழிக்க அழிந்தன (பூங்கொடியார் மனம் தேங்கடம்பின் மால்பட்டு அழிந்தது). பூங்கொடி போன்ற மாதர்களின் மனமானது (முருகவேள் அணிந்துள்ள (தேம்) இனிய கடப்பமாலை கிடைக்கவேண்டுமே என்னும்) மால் பட்டு - ஆசை கலக்கம் செய்ய அதனால் சோர்வுற்றது; மா - அழகிய (மயிலோன்) மயில் வாகனனாம் முருகன் திருக்கரத்து வேல் பாய்ந்ததால் (வேலையும் சூரனும் வெற்பும்) அழிந்தன. கடல் அலறுண்டது, சூரன் அழிந்தான், எழுகிரியும் கிரவுஞ்ச கிரியும் பொடிபட்டன; (அவன்) அந்த முருகனது (கால் பட்டு) திருவடிகள் பட்டதனால் (இங்கு) இங் என் தலைமேல் (அயன் கையெழுத்து) பிரமன் எழுதியிருந்த விதி எழுத்துக்கள் (அழிந்தது)அழிந்துபோயின. (சு உ) சேல்மீன் வயற்பொழிலை அழித்தது, கடப்பமாலை மாதர்களின் மனத்தைக் கலக்கி அழிந்தது. வேல் - கடலையும் னையும், எழுகிரி - கிரவுஞ்சத்தையும் அழித்தது, முருகன் திருவடி ரமன் எழுதியிஎன் தலை எழுத்தை அழித்தது. (கு - உ. வேலால் கடல் சூர், மலை பட்டது. நேமிச் சூரொடு மேருத் தூளெழ திருப்புகழ் 68; அலங்காரம் 62ம் பார்க்க அயன் கையெழுத்து அழிந்தது - என்பது என் பிறப்பிறப்பை முருகவேளின் திருவடி ஒழித்தது - என்பதாம். "என் ஐயிரு திங்களும் மாசுணமாக்கும் பதாம்புயன்' என்றார் கந்தரந்தாதியில் (71); இது (அவரது திருவடி தீகூைடியின் சிறப்பை உணர்த்துகின்றது. போரூர்க் குகன் பதஞ் குடும் சென்னிக் கில்லைப் பிரமன் துயருறக் கீறும் எழுத்துக்களே" - (போரூர்ச் சந்நிதிமுறை அலங்காரம் 41) பொழில் தேங்கட்ம்பு எனப் பிரித்து சோலையில் உள்ள கடம்பு எனலுமாம். வயற்பொழில் அழிந்தது என்பதனால் மண்ணாசை ஒழிந்தது என்பதும், பூங்கொடியார் மண்ம்.......அழிந்தது' என்றதன்ால் பெண்ணர்சை ஒழிந்தது என்பதும், (வெற்பு) பொன்னஞ் சிலம்பு - கிரவுஞ்சம் அழிந்தது என்றதனால் பொன்னாசை ஒழிந்தது என்பதும், வேலை . அழிந்தது என்றதனால் பிறவிக் கடல் ஒழிந்தது என்பதும், சூரன் - அழிந்தது என்றதனால் ஆணவம் அடங்கிற்று என்பதும் - அயன் கையெழுத்து அழிந்தது என்றதனால் பிரமனே!