பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M() முருகவே திருமுறை 1 ஆம் திருமுறை "திட்டப்பட இனி மன்னால் என் சென்னி"(கந்தரந்தாதி 72 என்னும் பேற்றினைப் பெற்றாயிற்று என்பதும் இச் செய்யுளாற் காணக் கிடக்கின்றன. 41. பிரார்த்தனை -திருவடியைப் பெற பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும் மாலேகொண் டுய்யும் வகையறி யேன்மலர்த் தாள்தருவாய் 'காலே மிகவுண்டு காலே யிலாத கணபனத் தின் மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ் வேலவனே. (அந்) காலே மிகவுண்டு......வேலவனே! பாலே அனைய....... தாள் தருவாய். (பொ - உ) (காலே) காற்றையே நிரம்ப உண்டு. (காலே இலாத) கால்கள் என்பனவே இல்லாதனவான (கணபணத்தின்) கூட்டமான படங்களை உடைய ஆதிசேடன் என்னும் பாம்பின் மேலே துரங்குகின்ற திருமாலின் மருகனே! சிவந்த வேலாயுதனே' (பாலே அணைய) பால்போல இனிக்கின்ற (மொழியார் தம்) பேச்சினை உடைய மாதர்களால் கிடைக்கும் (இன்பத்தைப் பற்றி) இன்ப சுகத்தையே பற்றினவனாய் எந்நாளும் (மாலே கொண்டு) காம மயக்கமே கொண்டவனாய் இருந்து, (உப்யும் வகை) அம் மயக்கம் நீங்கிப் பிழைக்கும் வழியை ھئے/ கின்றிலேன்; (அடியேன் உய்யும் பொருட்டு) நீஎன் மலரன்ன திருவடியைத் தந்தருளுக (சு - உ) முருகா! பெண்ணாசை கொண்டு மயங்கும் நான் உய்ந்து ஈடேறும்படி உனது திருவடியைத் தந்தருளுக (கு உ) கால்-காற்று. 2கணபணம் ஆயிரம் பணாமுடி களையுடைய சேடன், கண்ம்-கூட்டம், பணம்=படம் காலே மிக உண்டு காலே இலாத கணபணம் என்பதில் உள்ள பொருளழகில் --- விரோத அணி அதிசய அணி - முரண் அணி - என்பவ்ற்றின் இலக்கணம் அமைந்துளது. 42. தன் குறை கூறல் நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிற்குங் குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான் பனங்காட்டு மல்குற் குருகுங் குமரன் பதாம்புயத்தை வணங்காத் தலைவந்தி தெங்கே யெனக்கிங்ங்ண் வாய்த்ததுவே. (பொ - உ) (நிணம் காட்டும் கொட்டிலை) மாமிசத்தால் விளங்கும் ஒதுக்கிடமாகிய (சிறு குடிலாகிய இவ்வுடலை o -