உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 45 பருகியும் அனுபவித்தும், (பெருகி) அந்த இன்பத்திலேயே அதிகமாக ஈடுபட்டு, துவட்சி - சோர்வு அடையும் இந்த மாயமான விளையாட்டால் வரும் (மநோ துக்கம்) மன வேதனை (மாய்வதற்கு) ழிவதற்கு (நீ யான) உன்னுடன் நான் ஐக்கியம் அடைவதற்குரிய ஞான ரிநோத நிலையை என்றைக்கு நீ எனக்கு அருள்புரிந்து உபதேசிப்பாய். (சு - உ) சிற்றின்ப உணர்ச்சி நீங்க முருகா! நீ என்று என்னை உன்னுடன் சேர்த்துக்கொள்வாய். (கு உ) தோயா = தோய்ந்து நீயான ஞான விநோதம் ஆன்மா சிவத்தொடு ஒன்றுபடுதல்."அவனே தானே ஆகிய அந்நெறி ஏகன் ஆகி" - அரனுடன் ஒன்றாகி நிற்பது - சிவஞான போதம் 10ஆம் சூத்திரம் "ஏகபோகமாய் நீயும் நானுமாய்", நீ ே நான் வேறொனாதிருக்க நேராக வாழ்வதற்கு" - திருப்புகழ் 862, 220 சேய் - செந்நிறம் சேயுற்ற கார்நீர் வரவு" - பரிபாடல் 11,114 சேய் எரி" - சம்பந்தர் 268.5.சேயான வேல்-செவ்வேல். 47. தன் ஆனந்தம் கூறினது 'பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப் புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித் தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே. (அந்) செயல் மாண்டடங்க-சாகரத்தே பத்தித் திருமுகம்.அமுது கண்டேன். - (பொ - உ) என் செயல் ஒழிந்து ப்கின் உடனே - புத்திக் கமலத்து - என் அறிவாகிய தாமரை மல - உருகியும், பெருகியும், (புவனம் எற்றி) உல்க வாசனையைத் தள்ளி ஒதுக்கித் (தத்தி) பாய்ந்தும் கரை புரண்டோடின பரம ஆனந்தமாகிய பெருங் கடலினிடையே (பத்தி) ஒழுங்காய் அமைந்த் திருமுகங்கள் ஆறுடன் பன்னிரு தோள்களைக் கொண்டதாய், (தித்தித்திருக்கும்) எங்குமிலாததோ ரின்பச்சுவையைத் தருகின்றதான அமுதம் ஒன்றை நான் தரிசித்து (மகிழ்ந்தேன்) (சு-உ என் செயல் ஒடுங்கின இடத்து பரமானந்தப் பெருங்கடல் வெள்ளந்தோன்ற அங்கே அறுமுகத்தமுதைத் தரிசித்தேன். (கு உ) பத்தி = வரிசை முத்தைத்தரு பத்தித் திருநகை" - திருப்புகழ் பத்தித் திருமுகம் "பத்தியதாம் ஆறுமுகம்" - திருப்புகழ் 1116.