உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை செயல் மாண்டங்கச் சிவானந்தம் பெருகும். செயலற் றிருக்கச் சிவானந்த மாகும் செயலற் றிருப்பார் சிவயோகந் தேடார் செயலற் றிருப்பார் செகத்தொடுங் கூடார் செயலற் றிருப்பார்க்கே செய்திஉண் டாமே - திருமந்-2319. "என் செயல் அழிந்து அழிந்து அழிய மெய்ச் சிந்தை வர என்று நின் தெரிசனைப் படுவேனோ - திருப்புகழ் 47. ஆனந்த சாகரம் . இதனை அழிவின்றி நின்றதோர் ஆனந்த வெள்ள்ம்' - என்றார் மணிவாசகர்-திருவாசகம் 36.8 48. தன் குறை கூறல் புத்தியை வாங்கி நின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய் த்தியை வாங்க அறிகின்றி லேன்முது ஆர்.நடுங்கச் சத்தியை வாங்கத் தரமோ குவடு ಎ படக் குத்திய காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே. (அந்) குவடு.....காங்கேயனே! புத்தியை..தரமோ-வினையேற்கு என் குறித்தனையே. (பொ - உ) (குவடு) கிரெளஞ்ச கிரியும் எழுகிரியும் (தவிடுபட) பொடி பொடியாய் விழ அவைதமை (வேற்படை கொண்டு) குத்திய (காங்கேயனே) கங்கா புத்திரனே! புத்தியை வாங்கி - பொறிவழியே (ஒடுகின்ற) என் மனத்தை (வாங்கி) இழுத்துப் பிடித்து (நின்) உனது (பாதாம்புயத்தில்) திருவடித் தாமரையிற் (புகட்டி அன்பாய்) அன்புடனே புக வைத்து, (உன்னிடமிருந்து) முத்தி வீட்டை வாங்கும் வழியை அறிகின்றேன் இல்லை; (என் ஆணவத்தை) அடக்குதற்கு முன்பு (முது சூர்) பழமையான சூரன் நடுங்கும்படி (சத்தியை) வேற்படையை (வாங்கு அத்தரமோ) செலுத்தினாயே அந்த ଈ]]ଶ]}4F ா எனக்கும் - சூரன் ஆணவத்தை அழிக்க வேலை விட்டாயே அந்த வழிதானோ என் ஆணவத்தை அடக்குதற்கும்; (வினையேற்கு என் குறித்தனை) - வினைக்கு ஈடுபட்ட என்னை வழிப்படுத்த என்ன வழிதான் (நீ)குறித்துள்ளாய்! (சு உ) மாயம் நிறைந்த கிரவுஞ்சத்தையும், ஆணவம் நிறைந்த சூரனையும் அடக்குதற்கு நீ வேலைப் பிரயோகம் செய்தாய், அம் மாதிரி என் மயக்க அறிவையும் ஆணவத்தையும் அழிக்க உனது வேற்படையைத் தான் செலுத்த வேண்டி வருமோ! முருகா நீ என்னை வழிப்படுத்த எந்த வழியைத்தான் குறித்துள்ளாய்!