பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு.அநுபந்தம் 523 உண்டாகும். இதன் வேர்ப்பட்டை கோழை, இருமல், உட்சுரம், வயிற்றுப் புழு இவைகளைப் போக்கும். "சங்கம் வேர்ப்பட்டை சளியிருமலைச்சுரத்தை...... கிருமியை....... ஒழிக்கும்ால்" (8)- (அ.கு.) சச்சு இலை.24: சச்சு - என்பது நீர்ச்சுண்டி என்னும் நீர்ப்பூடு ஆற்று நெட்டி குளக்கர்ை ஓரங்களில் பயிராகும். யைச் சமைத்துண்பார்கள். இலை திண்டினவுடனே சுணங்கும். இலையை வதக்கி ஒற்றடமிட்டாலும், கட்டினாலும், வலி, வீக்கம் போகும். சண்பகம் - 2: மரம் - இதன் பூ சுரம், கண் அழலைப் போக்கும், பூக்களிலிருந்து நறுமணமுள்ள அத்தர் செய்யலாம். சணவு-27 (சனாவு) கையாந்தகரை - கரிசிலாங்கண்ணி இது நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை நாலு இனம். இதனால் காமாலை, குட்டம், பாண்டு, பல் நோய் போம். மேதை' எனபதைப பாாகக. "குரற்கம்மல் காமாலை குட்டமொடு சோபை, உரற்பாண்டு பல்நோய் ஒழியும்" - (அ.கு.) சதகுப்பி 23: (சதகுப்பை) பூண்டு வகுப்பைச் சேர்ந்தது. இதனால் தலைவலி, காதுவலி நீங்கும்; பசி உண்டாகும். இது சூட்டுடம்புக்கு ஆகாது. சதகுப்பி விதையை இடித்து 1 தோலா முதல் 3 தோலர் வ்ரை எடுத்துப் பத்துபலம் வெந்நீரில் ஊறவைத்துக் கொடுக்க, குழந்தைக்கு உண்டாகும் மாந்தம், பெரியவர்க்கு உண்டாகும் வயிற்றுவலி முதலிய போம். சம்பிராணி - 25: () (சாம்பிராணி) ஒருவகைச் செடியின் பட்டையிலிருந்து வடிந்து, உலர்ந்துபோன ஒருவித நறுமணமும் கார்ப்பும் உள்ள பிசின். இதில் Benzoic acid என்கின்ற் சத்து இருக்கின்றது. நாள்பட்ட இருமல், மார்சளி இவைகளைப் போக்கும். இதன் புகை நுண் புழுக்களையும் கெட்ட நாற்றத்தையும் போக்கும். சாம்பிராணித் தைலம் వేవ్, நீரேற்றம் இவைகளைப் போக்கும். (ii) சாம்பிராணிப் பூண்டு அல்லது பிரமிய வழுக்கை (சப்தளை) எனப் பெயரிய ஒருவகைக் கொடிப் பூண்டு உண்டு இது கால்பிடிப்பு, கைகால் எரிவு, மலபந்தம் முதலியவற்றைப் போக்கும்.