பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 аук»~ \oven Juxi/«ту» 1 ஆம் திருமுறை போந்தேனுக்கும் உண்டு கொலோ-ஆரூர்த் திருமூலட் டானனுக்குப் பொய்யன்பிலா அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. என அப்பரும் (4-101-8, 9), அடியார்க்கும் அடியேன் எனச் சுந்தரரும்' (7-39). அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே! என மணிவாசகரும் (26). 'உன் அடியரொடு கூடும் வகைமையருள் புரிவாயே என அருணகிரியாரும் (திருப்புகழ் 1211 கூறியுள்ளன காண்க, அடியரொடு கூடும்பேறு அருணகிரியார்க்கு அவர் வேண்டியவாறே கிடைத்தது என்பதை 100ஆம் பாடலிற் காண்க அரசர் செல்வமும் அழிவதை இபமாந்தர், தினமணி சார்ங்கபாணி எனத் துவக்கும் திருப்புகழ்ப் பாடல்களில் 1816, 778) காண்க 50. பிரார்த்தனை யம பயம் நீங்க படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற் பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்று நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே. (அந்) பெரும் பாம்பினின் று.இராவுத்தனே! படிக்கும்அஞ்சலென்பாய். (பொ. உ) பெரிய காளிங்கன் என்னும் பாம்பின் மீது நின்று நடனஞ் செய்த பெருமானாம் திருமாலின் மருமகனே! கொடிய சூரன் நடுக்கம் கொள்ள (வெற்பை) அவனுக்கு அரணாயிருந்த எழுகிரியை (இடிக்கும்) பொடி செய்த (கலாபத் தனிமயில்) தோகை நிரம்பிய ஒப்புற்ற மயிலில் ஏறும் வீரனே! (படிக்கும்) கற்றோரால் பெரியோரால் ஒதப்படும் உனது. அழகிய புகழ்களை நானும் எடுத்து எடுத்து ஒதுவேன்.(உனது ருப்புகழை மேலும் மேலும் நான் (போற்றுவேன்) பாடிப் பாடிப் போற்றுவேன்), நீ (கூற்றுவன்) எமன் (என்னைப்) பாசத்தினால் - பாசக் கயிற்றாற் கட்டிப் பிடிக்கும்போது என் எதிர் தோன்றி வந்து (அஞ்சல் என்பாய்) பயப்படாதே என்று திருவாய் மலர்ந்தருளுக (சு - உ) திருமால் மருகனே! சூரனை நடுங்க வைத்த மயில்வாகனனே! உனது திருப்புகழைப் பாடுவேன்; யமன் வரும். போது நீ வந்து அஞ்சாதே' என்று எனக்குத் தைரியம் கூறுக (கு உ) காளிங்கன் மீது நடனம் - திருப்புகழ் 245-2 பக்கம் 114; பாட்டு 402, பக்கம் 518 பாட்டு 868 பக்கம் 544-கீழ்க் குறிப்புக்கள். இறைவன் திருப்புகழைப் பாடுதல் வேண்டும். திருப்புகழ் விருப்பாற் பாடிய அடியேன் படுதுயர் களையாய் திருப்புகழ் விருப்பாற் பன்னலம் தமிழாற் பாடுவேற் கருளாய்