பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 49 -சுந்தரர் 7.69-2, 4. திருப்புகழ் முழக்குவன:பூவேதாளம் அநேக விதங்களே திருவகுப்பு முருகவேளின் திருப்புகழைப் போற்றுவதால் வரும் பயனை வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர் சீலம் ஏத்திய சித்தப்ர சித்தரே" - (சிந்து வகுப்பு) கருப்புக்ழாம் பிற சமயக் கதைக் கேளா த ు ருப்புகழை உரைப்போர்க்குச் சித்தியெட்டும் எளிதாமே. கைக் கலம்பகம் 1 சூரன் நடுங்க இடிபட்ட வெற்பு - அவனுக்கு அரணாயிருந்த எழுகிரி-பாடல் 32ன் குறிப்பைப் பார்க்க காலன் வரும்போது காத்திட "காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது வந் தஞ் ன்பாய்" - அபிராமி அந்தாதி 33 ராவுத்தன் பாடல் 37 குறிப்பைப் பார்க்க பாம்பை அடக்கி ஆடினர் திருமால், பாம்பை அடக்கும் மயிலில் ஆடுகின்றாய் நீ ஆதலால் கூற்றுவனது பாம்பன்ன பாசத்தை உனது மயிலே அடக்க வல்ல்துஎன்பது குறிப்பு 51. உலகுக்கு உபதேசம் மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியன்யின் நிலையான மாதவஞ் செய்குமி னோதும்மை நேடிவருந் தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர் இலையா யினும்வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே (அந்) மலையாறு கூறெழ வேல் வாங்கினானை அன்பின் வணங்கி, இலையாயினும் வெந்த் தேதாயினும் ஏற்றவர்க்குப் பகிர்ந்து நிலையான-துணையுங் கண்டீர். (பொ உ) மலை - கிரவுஞ்சம் (ஆறு கூறெழ) கூறாகப் பிளவுபட வேலாயுதத்தை (வாங்கினானை) செலுத்தின வணை, அன்பின் வணங்கியும் - உண்மை அன்புடனே வணங்கியும், (இலையாயினும்) பச்சை வெள்ளரி போன்ற இலைக் கறிகளை கீரைக் கறிகளையாயினும் (அல்லது வெற்றிலை (பாக்கை யாயினும்,வெந்த உணவு எதையேனும் - யாசிப்பவர்களுக்குப் ( பகிர்ந்து) பங்கிட்டுக் கொடுத்தும், நிலையான நல்ல தவத்தைச்செய்யுங்கள் (அங்ங்ணம் செய்வது) தும்மை தேடிவரும் உங்களைத் தேடிவரும் - (தொலையா வழிக்கு) இறந்த பின் நீங்கள் செல்ல வேண்டிய தொலையாத நீண்ட வழிக்குப் (பொதி சோறும்) கட்டுச் சோறும், உற்ற பொருந்திய துணையுமாம் (என்பதைக்)கண்டீர்-அறிவீர்களாக (சு-உ) பசித்து யாசிப்பவர்க்கு பச்சையாகவோ வெந்த தாகவோ ஏதேனும் முருகனைத் தியானித்து உண்ணக் கொடுங் கள், அச் செய்கை நீங்கள் இறந்த பின் போகும் நெடு வழிக்குப் பொதிசோறு