பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை ஈ = தந்தருள் ஈ என்பது இழிந்தோன் உயர்ந்தோன் மாட்டு இரக்கும் சொல். செல்வர் பாற் சென்று ஈ எனக்கென்னும் இம்மாற்றம்" -நளவெண்பா-கலிதொடர்-71 "ஈ, தா, கொடு எனும் மூன்றும் முறையே இழிந்தோன், ஒப்போன், மிக்கோன் இரப்புரை".நன்னூல் சூ.407 மயில் - பாம்பைக் கொத்தி உண்ணும் - வெம்பண காகோதாசனம் ஊறு கண்டிட மேல்வீழ் தோகை - திருப்புகழ் 1000 பணிபாச சங்க்ராம்ம் - தாக்கமருக் கொரு சாரை திருப்புகழ் 291 அட்சம பணி பட்ச பணி பட்சண பட்சண-பட்ச-கடைக்குன்றி ராட்சச பட்ட விள் சோப தீரன் - நிசாசராந்தக கந்தரந்தாதி 48 "நிருதரார்க் கொரு காலா" திருப்புகழ்.1168 வேல் - சேவல்ைப் பாட விரும்பினார் அருணகிரியார் ஆடும்பரி வேல் அணி சேவலெனப் பாடும் பணியே பணியா அருள்வாய் கந்தரநுபூதி. தாரை வடிவேலைச் சேவல்தனை...... சிந்தியேனோ - திருப்புகழ் 525 வெற்றி வேலதும்......அதிர அரற்று கோழியும் ■■■ 睡 ■■ மறவேனே"- திருப்புகழ் 169. 53. உலகுக்கு உபதேசம் வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினா ற் பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற் றேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீனுக்கு மாய்ப்பவரே. (பொ. உ. வேடிச்சி-வேடர் குல மகள் வள்ளியின் கொங்கையை விரும்பின குமாரக் கடவுளை உண்மையான அன்புடனே பாடிக் (கசிந்து உள்ளம் உருகி, (உள்ளபோதே கையில் பொருள் இருக்கும் பொழுதிலேயே (தொடாதவர்) தானம் செய்யாதவர்கள், (பாத்க்த்தால்) பெரும் பாவ வழியிலே தாம் தேடின. பெர் த் (தங்களுக்குப் பயன்படா வகையில்) புதைத்து வைத்தும், திருட்டில்ே இழந்தும், திகைப்புற்று மயக்கம் அன்ட்ந்து, (இன்ளத்து) சோர்வுற்று வாடிக் (கிலேசித்து) கவலைப்பட்டுத் (தமது வாழ்நாள்கள்ை வீன் பொழுதாக அழித்தவர்களாவார்கள் (சு உ) முருகனைத் தியானித்துத் தானஞ் செய்யாதவர்களின் பொருள் அவர்களுக்குப் பயன்படாமற் போய்க் கவலையை ஊட்டும். (கு-உ)கொங்கையை விரும்புதல்-பாடல் 6 கீழ்க்குறிப்பு 'உள்ளபோதே கொடுக்கவேண்டும் - "கைத்துண்டாம் போழ்தே கரவாதறஞ் செப்மின்"-நாலடி 29 "என்னானும் ஒன்றுதங்கையுறப் பெற்றக்கால் பின்னாவ தென்று பிடித்திரா.முன்னே கொடுத்தார் உயப்போவர்"நாலடியார் 15