பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 25. திருப்பரங்கிரி வகுப்பு 597 8. சிந்திய - சிதறி விழுந்த (அரம்பை) வாழையானது பலாமரத்தின் பழத்தின் மேல் வந்து விழ, (அதன்) மென்கனி மெதுவான பழம் (உடைந்த) உடைபட்ட சுளை (விண்ட) வெளியிட்ட (நறை கொண்டு) தேனைப் பருகி சிறு செண்பக மல்லிகைக் காடுகள் வளர்கின்ற (தென்) அழகிய பழநிப்பதியில் வீற்றிருக்கும் முருகேசனே! பொழிப்புரை 1. சாதி குலம் (ஆவதும்) என்பன, (குடி ஆவதும்) குடும்பம். குடித்தனம் என்பது, (சனம் ஆவதும்) ஜனக்கட்டு என்பது, (கிளை) சுற்றத்தார் - (தாரம்) மனைவி (திரபாலர்) ஸ்திரம் (நிலை) என நம்புகின்ற மக்கள், (பிரதானம்) விசேஷ நிலை, (பெருகு ஆண்மை) ஓங்கி வளரும் ஆண்மைக் குணம் (மனோதிடம்), (பெறுதானம்) பெறுகின்ற தானப் பொருள்கள், (பகுமானம்) மிக்க பெருமை, சிவஞானம், (பல கோலம்) பல வகைத்தான அலங்காரங்கள் (புரி) இவை எல்லாம் ஏற்படுவதான தொழில்களுடனே செய்கைகளுடன், 2. (தாழ்வு அகன்றிடு) அவமானம் - குற்றம் இல்லாத வாழ்க்கையும், (வெம்பிணி நோயும் அங்கு அது இலாது) கொடிய பிணி நோய்கள் இல்லாமல் (உரம்தனில் ஆவதும்) (மனம், தேகம் இவை) வன்மையைப் பெற்றிருத்தலும் (தளர் சாவு ஒழிந்திடு) தளர்ச்சியும் சாவும் இல்லாததான யோகமும்) பாக்கிய நிலையும், (சிவபேறும்) சிவனாரது திருவருட்பேறும், (எந்த நிதானமும்) எல்லா விதமான சமநிலையைச் (செய்) காட்டித் தருகின்ற (தராசு கண்டது போல்) துலாக் கோலைக் கண்டது போன்ற நிலையும் (வரும்) வந்து கூடும். (பொது ஆகும்) அந்நிலை யாரும் பகிரங்கமாகப் பார்க்கக் கூடியதாய் இருக்கும் - என்று என அறிந்து, உனது (இருதாளையே) இரண்டு திருவடிகளையே 2தராசு - இதைச் சமன் செய்து சீர் தூக்கும் கோல்' என்றார் திருவள்ளுவர் சமன் செய்து சீர் தூக்கும் கோல் பேiல் அன்மந்த்ொரு பாற் கோடான்ம சான்றேர்க் கணி” Ju»Act»икһ 118.