பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/670

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 663 31. மாயையில் இட்டனை நீ வாழ்க பாழ்வாழ் வெனுமிப் மாயையிலே வீழ்வாயென என்னை விதித்தனையே தாழ்வானவைசெய் தனதாம் உளவோ வாழ்வாய் இனிநீ மயில்வா கணனே (அந்) மயில் வாகனனே! பாழ்வாழ்.......வாழ்வாய் இனி நீ. (பொ.உ) மயில்வாகனக் கடவுளே! (பாழ் வாழ்வு எனும்) பாழ்படுவதான இந்த வாழ்க்கை என்கின்ற (இப் படுமாயையிலே) இந்தப் பெரிய மாயைச் #ಧೀ (வீழ்வாய் என) நீ விழுவாயாக என்று (என்னை |ိ த்தனையே) என் தலையில் எழுதிவிட்டாயே! (தாழ்வானவை) (இழிவான செய்கைகள்) குறைநேரும்படியான செய்கைகள், (செய்தன) நான் முன்பு செய்தவைதாம் (உளவோ) ஏதேனும் இருக்கின்றனவோ - நீ என்னை இங்ங்னம் மாயை வாழ்வில் தள்ளிச் சிக்கவைத்தற்குக் காரணம்; எது எப்படி இருக்கினும் இருக்கட்டும். நான் எக்கதி பெறினும் பெறுக பெருமானே! நீ வாழ்வாய் இனி - நீ இனிமேலும் வாழ்வாயாக (சு-உ) முருகா - நான் ஏதோ குறைசெய்தேன் போலும்; அதன்ால் என்ன்னப் பாழ் வாழ்வில் தள்ளிவிட்டாய் ஆயினும் நீ வாழ்க என்றுதான் நான் உன்னைத் துதிப்பேன். (கு.உ) (1) படு மிகுதிப்பொருளைக் குறிக்கும் கொடிய என்னும் பொருளது. படுமூளி, 'படுபாவி என்புழிப் போல. திருப்புகழ் 291, 310. (2) வாழ்வு - மாய வாழ்வு வாழ்வாவது மாயம் இது மண்ணாவது } என்றார் சுந்தரர் (7-78-1). ஒரு பிடி சாம்பரும் காணாது மாய உடம்பிதுவே (கந்:அலங்:57) மின்னே நிகர் வாழ்வு-அநுபூதி 25, 27-ம் பார்க்க (3) நான் எக்கேடு கெட்டாலும் அது என் குற்றமே ன் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. கருணாகரமூர்த்தி ஆதலால் நீ இனியும் வாழ்க என்றபடி இனி, என்னை இப் பாழ் வாழ்விற் சிக்கவைத்தாயே! நீதான் வாழ்ந்திரு ஐயா! என்று வசைசுறுவதும் தொனிக்கும். காயங் காட்டிக் கண்ணிர் கொண்டால் வாழ்ந்து போதிரே'