உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/750

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் விருத்தம் 743 3. நீண்ட(மைக்கடல்) கரிய கடல் (சுட்டதற்கு) சூடுபட்ட காரணத்தால்(அடைந்து)தன்னை இப்போது ச்ர்ண் அடைந்து ஏழு கடல்களும் (வ்ேற்பிரானே! நீ) எங்க்ளைக் காத்தருளுக என்று கூறவும், 4. (நிபிடமுடி) நெருங்கிய சிகரங்களை உடைய (நெடிய கிரி) நீண்ட மலைகள் யாவும் (எந்தமை) எங்களைக் (கா எனவும்) காத்தருளுக எனவும், வேண்டும்படி (நிகழ்கின்ற) விளங்கி நிற்கும் (துங்க நெடுவேல்) பரிசுத்தமான நீண்ட் வேல் - எது எனல அதுதான. 5. (ஆடும்) ஆடுகின்ற (மை) பசிய (அல்லது ಕೆ? (கணபணம்) கூட்டமான படங்களையும் (கதிர்முடி) வீசும் உச்சிகளையும் (புடை) வாயின் பக்கங்களில் (எயிற்று) பற்களில் (அடல் எரி) பலத்த நெருப்பையும், கொடியதும் உக்ரமானதுமான 6. (அழல்விழி) நெருப்புக் கண்ணையும், (படுகொலை) கொடுங்கெர்லைக்கு (கடைய) இடமான (கட்செவியினுக் பாம்புகளுக்கு (அரசினை அரசிாகிய ஆதிசேடனைத் り தனியாக எடுத்துத் தூக்கிச் 7. (சாடும்) அடித்துதறுவதும், (மைப்புயல் என) கரிய மேகம் என்று சொல்லும்படி (பசுநிறச் சிகரியில்) பச்சைமாமலைபோல (தாய் மிதித்ததுடன்) தாவி அடியிட்டு நடனதாளத்துடன் (நடிக்கும்) நடனம் செய்வதும் 8. (சமர மயில்) சூரசம்மாரப் போரில் மயிலாக வந்ததுவுமான வாகனத்தை உடையவன், (அமரர் தொழு நாயகன்) தேவர்கள் வணங்கும் தலைவன், ஷண்முகன் ஆகிய் முருகவேளின் திருக்கரத்து வேலாயுதமே. (க.உ) ஷண்முகன் திருக்கை வேலே கடலும் மலையும் சரண்புக விளங்கும் வேல் என அறிக. (கு.உ.) (1-4) சூரியன து செவ்வொளியை மழைகள் கெளவி வாய் கொண்டு மூட, இம்முறை எங்களுக்கு வெற்றியைக் கொடு என்று கடல் கேட்பதுபேர்லக், கரிய எழுகடலும் செவ்வொலி யுள்ள் வேலின் சேவடியைச் சரணெனப் பிடிக்கின்றன. (6) பாம்புக்கு அரசு - ஆதிசேடனை மயில் சாடுவது கந்தரலங்காரம் 97 மயில் வகுப்பு அடி 4