பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/2 «Jost»* \ov•n Nost» ччичт I ஆம் Awமுறை (1) போக்கும் வரவும் புறம்புள் மாகிரின்று தாக்கும் ஒருபொருளைச் சந்திப்ப தெக்காலம் பத்ரகிரியார் . மெய்ஞ்ஞானப் புலம்பல் 100 இந்த வாக்கு ஒற்றுமையைக் காணும்போது 'பத்ரகிரியர் புலம்பல் முதலான நூல்களை அருணகிரியார் இளமையிற் கற்றிருக்கவேண்டும் என்றுதோன்றுகிறது. (2) இராப்பகல் இராப்பகல் அற்ற இடத்தே இருந்து பராக்கற ஆனந்தத் தேறல் பருகார்" - திருமந்திரம் 331, போக்கும் வரவும், நினைப்பும் மறப்பும், பகலும் இரவும் கடந்து உலவா இன்பம் மருவுவித்து"-கந்தர் கலிவெண்பா 28 (3) புறம்பும் உள்ளும் - இறைவன் உள்ளும் புறம்புமாய் நிற்பதால் உள் என்றும் சொல்வதற்கில்லை புறம் என்றும் சொல்வதற்கில்லை. உள்ளும் புறம்பு நின்ற துற்றறிவ தெக்காலம் - பத்ரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல் - 203. (4) வாக்கு - இலாமை - "சொல்லிறந்து நின்ற தொன்மை ஆதிகுணம் ஒன்றும் இல்லான்" - திருவாசகம் - குயில் 1. "மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே" - திருவாசகம் - சிவபுராணம். (5) வடிவிலாதது - "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்" -கந்தரநுபூதி 51. (6) முடிவு இலாதது - "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி" - திருவாசகம் - திருவெம்பாவை 1, (7) மணோலயம் பெற விரும்பினது - "மவுன பஞ்சர மனோலய சுகந்தருவாயே" - திருப்புகழ் 1110. (8) தன் வசத்தே ஆக்கும் = "தான் நின்றெனைத் தனக்குள்ளே ஒளிக்கும்" - பண்டார மும்மணி 4. (9) சொல்லொணா திந்த ஆனந்தமே - "சொல்லுகைக் கில்லை" என்றார் 10-ஆம் பாடலிலும் (அலங்காரம்). 74. உலகுக்கு உபதேசம் அராப்புணை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த அன்பாற் குராப்புனை தண்டையந் தாள்தொழல் வேண்டுங் கொடியஐவர் பராக்கறல் வேண்டும் மணமும் பதைப்பறல் வேண்டுமென்றால் 1.இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யெளிதல்லவே.