பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/841

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

834 (1) (2) முருகவேள் திருமுறை (11-திருமுறை 13. உபதேச காண்டம் (ஞானவரோதயர்) -- O -- கதழெரிகூர் அமலனுதல் விழியுதித்துத் தழலுதவக் கங்கை பாற்போய்ப்ப பதுமமிசைச் சரவணத்தின் வளர்ந்தறுவர் முலையொடுபார்ப் பதி முலைப்பால் உததிபரு கிக்கொடுஞ்சூர்த் தொலைத்தரசு மகவானுக் குதவி யன்னோன் புதல்வியொடு குறமகள் வேட் டொருகுமரன் . இருசரணம் போற்றல் செய்வாம். (72) 14. கந்த புராணச் சுருக்கம் - О : தேவர் குலப் பெருங்கமலம் இடுக்க ணான திமிரமகன் றளியோடு சிறந்து வாழ மாவலிசேர் அவுனர் குலக் குவளை வாடி மண்ணினிடைச் சுருங்கியிட வந்த பானு துரவடிவேற் குமரேசன் அடிய னேன்.புன் சொல்லினுக்கும் இரங்கியருள் சுரக்கும் பெம்மான் பூவடியாம் இருபோதும் மூன்று போதும் பூசைபுரிந் தன்பினொடு புகழ்ந்து வாழ்வாம். (73) வேல்வாழி, மயில்வாழி, சேவல் வாழி, வேறுமுள படைவாழி விளங்கு தண்டைக் கால்வாழி, அருள்பொழியும் விழிகள் வாழி, கவின்குலவும் ஈராறு கரங்கள் வாழி, மால்வாழி வாழியெனப் பணிந்து வாழ்த்தும் மலைமாது தருமுருகன் மகிழ்ந்த ஆறு பால்வாழி, எனை ஆளுங் கருணை வாழி பங்க்ருந்த மங்கையர்தம் பதங்கள் வாழி. (74)