பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/865

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

858 முருகவேள் திருமுறை (11:திருமுறை தொங்கலார் தேர்மீதிற் சோலைமலை செந்துளரில் தங்குந் திருஇலஞ்சிச் சண்முகனார். (349-359) (131) 349 வெள்ளி - சுக்கிரன் ; 351 அந்த முனி - நாரதர் 352 தகர் - டு 353 ஆண் மயில் - சூரன், 354 கன்டம் மறு உள்ளவன் வபிரான். 36. தணிகைப் பதிற்றுப்பத் தந்தாதி (கச்சியப்ப முநிவர் பாடியது) -: Ο Σ 1. எழுத்தி னவ்வுயிர் என்ன நிறைந்தளாய் முழுத்த பேரறி வாய்முத லாகிய வழுத்து சீர்த்தித் தணிகை மணாளனை அழுத்தும் உள்ளத் தவர்க்களுர் இல்லையே. 132. (அளுர் - துன்பம்) 2. சிந்தித் தறியேன் அரைக்கணமும் தெரிசித் தறியேன் ஒருகாலும் வந்தித் தறியேன் கனவினிலும் வழுத்தி அறியேன் மறந்தேனும் பந்தித் தடர்க்கும் மலஞ்சவட்டிப் பரமா னந்தம் எனக்களித்தான் கந்தித் தலருங் காவிவரைக் கந்தன் கருணைக் கெதிருண்டோ 133. 3. அற்றவருக் கற்றபர மானந்தப் பெருவெள்ளம் உற்றதிருத் தணிகைவரை உறப்பணிந்தா ரேயன்றி மற்றவரை வணங்குநரும் வணங்குநரை வணங்குநரும் பற்றறுத்துத் துடைத்தார்கள் பங்கயத்தோன் கையெழுத்தே. (134)