பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/876

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. பிள்ளைத் தமிழ்கள் 869 மருவும்ஆ வடுதுறைவன் விடையினா லயமென்ன, வந்த ரியணாலயம் மகிழ்சூ யன்கோயி லாமெனச், சீகாழி வடுகனா லயமாமெனப், பெருகுசிற் சபைசபா பதியினா லயமெனப் பேசுதிரு வாரூர் நகர் - பெரியநா யகர்கோயி லென்னவா னோர்களும் பேணுமிவை மத்தியாகத் தருமருத வனமகா லிங்கநா யகன்மதலை சப்பாணி கொட்டி யருளே தந்தைவெண் காடர்புகழ் எந்தைமுரு கேசனே சப்பாணி கொட்டி யருளே. (149) (காஞ்சி - சிதம்பர முநிவர்) (தணிகைப் பிள்ளைத் தமிழ்) மலையலையை அங்கையில் அடக்கி, இகல் வாதாவி மலையலை வயிற்றடக்கி வண்டமிழ் எனும்புதிய தென்கலை யுடன் பழைய வடகலையை நாவடக்கி நிலவலயம் உத்தரம் தாழ்ந்துதென் திக்கின் மேல் மிர்தலைத் தாளடக்கி நீணிற விடத்தினை மிடற்றடக் குங்கயிலை நிமலனை உளத்தடக்கிக் குலவிய கருப்ப நிறை மாதரென மந்தநடை கொண்டுவளர் தென்றலெனுமோர் குழவியைத் தன்வயின் அடக்குமல யத்திலமர் குறுமுனிக் கருள்குரவனாய்த் தலைமைபெறு வீட்டுநெறி காட்டுதணி கைக்கிறைவ சப்பாணி கொட்டி யருளே சரவணப் பொய்கைதனில் அவதரித் திடுமுருக சப்பாணி கொட்டியருளே. (கந்தப்ப தேசிகர் 150)