பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/878

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. பிள்ளைத் தமிழ்கள் 871 தேவே தேவர் சிரோமணி யேயென் சிருயிரே உயிரிற் செம்பொருளே அருளே முழு மணியே மணியிற் தேசிகமே முவா மறையே மறையின் பொருளே முத்தந் தந்தருளே முத்தமிழ் நற்சம ரப்பதி நாயக முத்தந் தந்தருளே. (152) (சிதம்பர சுவாமிகள்) 6. வருகைப் பருவம் (திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்) பேரா தரிக்கும் அடியவர்தம் பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும் பேறுங் கொடுக்க வரும்பிள்ளைப் பெருமான் என்னும் பேராளா! சேரா நிருதர் குலகலகா: சேவற் கொடியாய் திருச்செந்துார்த் தேவா தேவர் சிறைமீட்ட செல்வா என்றுன் திருமுகத்தைப் பாரா மகிழ்ந்து முலைத்தாயர் பரவிப் புகழ்ந்து விருப்புடன்அப் பாவா வாவென் றுனைப்போற்றப் பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால் வாரா திருக்க வழக்குண்டோ வடிவேல் முருகா வருகவே வளருங் களபக் குரும்பைமுலை வள்ளி கணவா வருகவே. (153) (பகழிக் கூத்தர்) (பழதிப் பிள்ளைத் தமிழ்) சீரார் நலஞ்சேர் பூவுலகில், தேவா சுரளில், மற்றையரில்