பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/890

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேய்த் தொண்டர்த் தொகை 883 பைந்தமிழ் தேர்ந் தருள்முநிவர் அடியார்க்கும் அடியேன் பகருடுப்பூர் நாகனார் அடியார்க்கும் அடியேன் அந்தமில்சர் நக்கீரர் அடியார்க்கும் அடியேன் அருளார்நல் லியக்கோடர் அடியார்க்கும் அடியேன் எந்தமிழ்மூதாட்டியார் அடியார்க்கும் அடியேன் எம்மான், எந் திருத்தணிகை அம்மானுக் காளே. 2. கம்பைசூழ் காஞ்சிநகர் மாதவத்தின் பயனாய்க் கந்தவேள் திருச்சரிதம் கடலுலகுக் களித்த நம்பெருமாண் கச்சியப்பர் அடியார்க்கும் அடியேன் நலந்திகழு முருகம்மை அடியார்க்கும் அடியேன் இம்பரெலாம் பரவுறுபொய் யாமொழியார்க் கடியேன் இளந்தமிழின் செழுங்கொண்டல் எனஉலகம் பரவும் எம்பெருமான் அருணகிரி நாதர்க்கும் அடியேன் எம்மான், எந் திருத்தணிகை அம்மானுக் காளே. 3. குமரகுரு பரஅடிகள் அடியார்க்கும் அடியேன் கோதில்சிவப் பிரகாசர் அடியார்க்கும் அடியேன் திமிரமல இருளகற்றும் சிவஞானி தருமைத் திருஞான சம்பந்த தேசிகர்க்கும் அடியேன் அமுதகவி சம்பந்த சரணர்வர கவியென் றறைமார்க்க சகாயர்குண சிலர்க்கும் அடியேன் எமதுசிதம் பரதேவர் அடியார்க்கும் அடியேன் எம்மான்,எந் திருத்தணிகை அம்மானுக் காளே. 4. வென்றிமா லைக்கவிஞர் அடியார்க்கும் அடியேன் வியன்பகழிக் கூத்தர்தம தடியார்க்கும் அடியேன். துன்றுபுகழ் செங்கோட்டைக் கவிராயர்க் கடியேன் துகளறுசீர்க் கச்சியப்ப முநிவரர்க்கும் அடியேன் நன்றுதிகழ் மாதவசுப் பிரமணியர்க் கடியேன் நவையில்சிதம் பரமுநிவர் அடியார்க்கும் அடியேன் என்றும் எம துளங்குடிகொள் கந்தப்பர்க் கடியேன் எம்மான், எந் திருத்தணிகை அம்மானுக் காளே.