பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை செங்கோட்டு வேலனை தான் தரிசி மகி# (یع - ای ) பிரமன் எனக்கு :: படைக்காது வீ 蠶 էՔ (கு உ) மன்றாடி = நடேசுரர். நோன்முகன் = பிரமன், செங்கோட்டுப் பெருமானது திவ்விய ஒலக்க விசேடம் இத்தன்மைத்து என இச் செய்யுள் விளக்குகின்றது. இதனாலன்றோ "செங்கோடமர்ந்த பெருமானே - சென்றே யிடங்கள் கர் எனும்பொ செஞ்சேவல்கொண்டு வரவேணும்" என்றார் ருப்புக 鷺 367. செங்கேழடுத்த" என்னும் இந்நூற் செய்யுளையுங் ER/T&T&T-T&R. திருச்செங்கோட்டைப் பற்றிப் பாடல் 23 கீழ்க்குறிப்பைப் பார்க்க 91. உலகுக்கு உபதேசம் கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப் பொருமா வினைச்செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன் தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே. (பொ உ) கருமால் மருகனை - கரிய திருமாலின் மருமகனை, செம்மான் மகளை - செவ்விய மானாக வந்த இலக்குமியின் மகளாகிய வள்ளியைக் (களவு கொண்டு வரும்) களவாடி வந்த் - (மா குலவனை) ரேஷ்டமான குலத்தவனை - சேவலைக் (கைக்கோளனை) கையிற் கொண்டவனை, (வானம்) தேவர்கள் - பிழைத்துய்யப் போர் செய்த மாமரமாகிய சூரனை அழித்த (போர் விேல்ன்ன) போருக்கு உற்ற வேலாயுதனைக் (கன்னிப் பூகமுடன்) இளங் கமுக மரங்களுடன், (தரு மா) - மரமாகிய மாமரங்க்ள் (மருவு பொருந்தி விளங்கும் திருச்செங்கோடனை வாழ்த்தித் துதித்தல் (சால ந்ன்றே) மிக நன்றான பணியாகும். (சு உ) திருமால் மருகன், வள்ளி நாயகன், சேவற்கொடியோன் சூர்மாவை அட்டவன் ஆகிய திருச்செங்கோட்டு வேல்னை வாழ்த்த நன்மைகள் கைகூடும். 徽 -உ) இச்செய்யுளில் ஜாதிகளைக் குறிக்கும் கருமான்,செம்மான் (சக்கிலி), மாகுலவர் (வேடர்), கைக்கோளன், வேலன் (வெறியாட்டாளன்) என்னும் பதசாதுர்யம் கவனிக்கற்பாலது. 'மறையவ னரசன் செட்டி தன் தாதை வயங்குநூற் சூத்திரன் புவனம், பறைதரு நல்ல சங்கரன் வேடன் பணிசிவன் விளங்குமுக் கனாக்கன், அறைசெயம் பட்ட னகமது புறத்தே காலியாட் டரவமா ரிடையன், பறையனு முன்ன ரானநீ யின்று பள்ளனா னமைதெரிந்தேன் யான்" - என்னும் போரூர்ப் புராணச் செய்யுளும் பள்ளு,35-இத்தகைமைத்து.