பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ குளிர்ந்த ஏதேன் தோட்டத்தில் வீற்றிருந்தாலும் அரேபியப் பாலையில் வீசும் வெப்பக் காற்று உன்னையும் தகிக்க வேண்டும்.ர் என்பது போன்ற மெல்லிய மனிதாபிமான உணர்வுகள் இன்றைய கவிதையின் இதய நாதமாகி மக்களினத்தை வழிநடத்திச் செல்லவேண்டும். O இன்றைய அரசியல் விளம்பரமோ பத்திரிகை விளம்பரமோ திரைப்பட விளம்பரமோ ஒரு கவிஞனின் சிறப்பையும் படைப்பின் தரத்தையும் முடிவு செய்யப் போவதில்லை. ஒரு கவிஞனின் படைப்பு இந்தச் சமுதாயத்துக்கு எந்த அளவு பயன்படுகிறது என்பதை வைத்துத்தான் அவன் சிறப்பும் அவன் படைப்பின் தரமும் எதிர் காலத்தில். நிர்ணயம் செய்யப்படும். ஸ்பெயின் நாட்டுக் கவிஞனான லார்கா, எந்த ஒரு கலைக்கும் இலயிப்புத்தான் சிறந்த இலக்கணம் என்பதை 'Duende என்ற தனது கட்டுரையில் நுட்பமாக ஆய்வு செய்கின்றான். எந்த ஒரு கலை, அதில் ஈடுபடுபவனை மெய்மறக்கச் செய்து, இரண்டறக் கலக்கும்படி செய்கிறதோ, அதுவே உன்னதமான கலை என்பது அவன் கொள்கை. ர் இந்த உருதுப் பாடலின் ஆசிரியர் மெளலானா அல்டாஃப் உசேன் அலி: இவர் கே. ஏ. அப்பாஸின் பாட்டனார். கவிஞர் முருகுசுந்தரம் 6