பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் தாயைக் கற்பழித்தான்; என் தாய் அழகி! அந்த வெள்ளையன்பட்டப் பகலில் என் தம்பியை எரித்தான்; என் தம்பி வலியவன்! அந்த வெள்ளையன் கைகள் கறுப்பு ரத்தத்தால் சிவந்திருந்தன; வெற்றிக் குரலோடு அவன் என்னைப் பார்த்துச் சொன்னான்: 'டேய் பையா! ஒரு - நாற்காலி ஒரு கைக் குட்டை ஒரு மதுப் புட்டி கொண்டுவா!' -என்று ர் அக் கொலைகார வெள்ளையன் கறுப்புச் சிறுவனைப் பார்த்துச் சாவதான மாகச் சொன்ன கடைசி வரிகளில் காணப்படும்குமுறல் என் குருதியில் சில்லிப்பை உண்டாக்குகின்றது. O மனிதாபிமானம் இன்றும் மகாகவிகளின் 'உடோபியா' வாகத்தான் உள்ளது. காட்டு மிராண்டித்தனம் 'கம்ப்யூட்டர் வேகம் பெற்றிருக்கிறது. அண்டை வீட்டுக்காரன் உடம்பு காய்ச்சலால் சுடும் போது உன்னுடம்பும் சுட வேண்டும். t டேவிட் டியாப் எழுதிய தியாகி என்ற தென்னாப்பிரிக்கக் கவிதை. முருகுசுந்தரம் கவிதைகள்