பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1) மெளனத்தின் மொழியை, முணுமுணுப்புகளை, சன்னக் குரல்களை உதாசீனம் செய்து, மனிதத்தின் அகண்ட நேர்மொழியை மீட்டெடுப்போம். (2) இழந்த அழகியத்தைப் புதுக்குவோம். (3) பின்னத்தை ஒதுக்கி முழுமையைத் தேர்வோம். மேற்குறித்தவற்றைச் சாதிக்கப் புதுக்கவிதையின் வகைமைகள் என்னவாக இருக்கலாம். ஹைகூ நன்றா? இனிமை, அழகு, பொருட்திரட்சி அனைத்தும் இருப்பினும், ஹைகூவின் குறுகிய வடிவு இன்றைய வாழ்வின் அகண்டத்திற்குப் பொருந்துவதாக இல்லை. நெருக்குதலில் வாழ்க்கை கிடந்தாலும், நம் துன்பங்கள் அகிலம் எங்கும் இருந்து வந்து தாக்குகின்றன. நம் - மனவெளி அகண்டத்தைக் குறுகத் தரிக்க எண்ணுவது பொருந்தவில்லை. எனவே ஹைகூ எழுதுவதைத் தவிர்ப்போம். நெடுங் கவிதை வாழ்க: தனிமொழியாளர் கவிதையை இயக்கமற்ற சித்திர மாக்கிக் குறும்பாடலாக்குகின்றனர். இதனை ஒதுக்கிக் கவிதைக்கு நீர்ம நீட்சியைத் தருவோம். சின்ன வரிக் கவிதைகளைவிட உணர்வு நீட்சிக்கு உதவும் நெடுங் கவிதைகளைப் போற்றுவோம். புதிய அழகியம் மரபின் இரசாயனமாகட்டும்: மரபின் பெருமைக் கொடைகளையும், புதுவாழ்வு நிர்ப்பந்திக்கும் புதுமொழிப் புனைவுகளையும் உள் வாங்கிக் கொண்ட புதிய அழகியத்தை ஏற்கும் கவிதை இயலை வளர்ப்போம். அறிவியல் வாழ்வியம் வழங்கும் உவமை உருவகங்கள், பழமையின் அழகுகளுடன் கைகோத்து வரட்டும் 'ராமன் எஃபக்ட் என்ற தலைப்பிட்டு நீலமணி பாபர் மசூதிச் சம்பவத்தைப் பேசுகிறார். 'வெள்ளை யானையில் அகலிகையின் தவிப்புப் பற்றிப் பேசும் முருகுசுந்தரம் காற்று மண்டலத்தைக் கடந்தவர் கனமிழந்து தவிப்பதுபோல என்று விண்வெளி அறிவியல் மொழியில் பேசுகிறார். - நெடுங்கவிதை நீள் மொழியாகத்தான் அமைய வேண்டும் என்றில்லை. மரபான நீள் நீட்சியின் சராசரித்தனத்தைத் தவிர்க்கின்ற நெடுங்கவிதை மொழி (Narative Style) யினைப் பின்னல்கள், ஒட்டல்கள், மாலைகள் போன்ற உத்திகளால் புதுக்கி உருவாக்குவோம். நெடுங்கவிதை கதைக் கவிதையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கதைகள் உதவலாம்; தொன்மம் (Myth) நன்று. கவிஞர் முருகுசுந்தரம் iO