பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுங்கவிதைகள் பெருமூச்சுப் போல் ஆயாசம் தருவன. ஆனால் இந்தக் காவியம் நெருக்கித் தொடுத்த பூச்சரங்களால் கட்டப்பட்ட நிலைமாலை போல் கவர்ச்சியும் அழகும் நிறைந்தது. சோம்பல் முறிக்கும் சொற்களைக் களைந்துவிட்டு அர்த்தப் படிமங்களாக அணிவகுக்கப்பட்ட அழகு நடையில் முன்னேறும் கதைக் கவிதை இது. அகலிகைத் தொன்மம் தமிழ்க் கவிஞர்கட்குத் தெவிட்டாத ஒரு கற்பனைக்களம். பலர் தொட்ட கருத்தில் புதுச்சாதனை நிகழ்த்தக் கருத்துப் பலமும், நல்ல கவிதை நலமும் வேண்டும். கவிஞர் முருகுசுந்தரத்திற்கு வாய்த்த புதுப்பார்வையும், புது உத்தியும், பழம் மரபுக் காவிய அழகுகளுடன் கைகோத்து வெள்ளை யானைக் காவியம் ஒரு புதுச் சாதனையாக உருப்பெற உதவியுள்ளன. அகலிகைத் தொன்மத்தைப் பெண்ணியச் சிந்தனைச் சுடர்களோடும், நுண்ணிய உளவியல் பார்வையோடும், தமிழுக்குப் புதிதான சர்ரியலிசப் படிமங்களோடும் புதுப்புனைவு செய்துள்ளார் கவிஞர் முருகுசுந்தரம். விரைந்து படிக்கத்தக்க மரபழகும், நின்று நிதானிக்க வைக்கும் புதுப் படிமங்களும், வியப்பூட்டும் சர்ரியலிசக் கனவுகளும், துணிச்சலான தொன்ம மறு விசாரணைகளும் வெள்ளையானை நூலிற்கு 'அண்மைக் காலத்தில் வெளிவந்த சாதனைப் படைப்பு' என்ற வரலாற்றுத் தகுதியைத் தந்து நிற்கின்றன. 'பிரமனின் விடலைக் கனவு’ என்று அகலிகையை அறிமுகப் படுத்தத் தொடங்கும் இந்தக் காவியத்தில் தான் எத்தனை கனவுகளின் நிழல்கள் அகலிகையின் ஆழ்மன இருட்டில் நட்சத்திரமாகும் கனவுகள்; அவளுடைய பகற் பிரம்மைகள்; வெள்ளை யானையின் கனவுத்தனமான பிரசன்னங்கள்; இந்திரக் கனவுகள் - என்று கனவுகளின் கதம்பமாகக் கட்டமைக்கப்பட்ட இந்தக் காவியம், விசுவாமித்திரனிடம் அகலிகை வரமாக வேண்டும் ஒரு கனவுத் தாகத்துடன் நிறைவு பெறுகிறது. இந்தக் கனவுகளின் கட்டமைப்பிற்கு இடையில், அகலிகையின் அடிமனத்தின் உண்மைகளைத் தேடும் கவிஞரின் முயற்சி, இறுதிக் காண்டத்தில் சுடும் நிஜங்களான அகலிகையின்வார்த்தைகளுடன்நிறைவு பெறுகிறது. தமிழ்க் காவியங்களில் இது போன்ற செறிவான கட்டமைப்புகளைக் காண்பதற்கு நாம் பழங் காப்பியங்களிடந்தான் செல்லவேண்டும். கண்ணகியின் கதையை மூன்று காண்டங்களில் தந்த இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் திருமணம் என்னும் சடங்குடன் தொடங்கி வழிபாடு என்னும் சடங்குடன் நிறைவு பெறும் கட்டமைப்புக் கொண்டது. கண்ணகி என்னும் சிறுமியைப் t; £ s so இ o § Initiation கவிஞர் முருகுசுந்தரம் 12