பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பட்ட சிறப்பு ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. மேகலை: நீங்கள் மிகவும் அடக்கத் தோடு பேசுகிறீர்கள், உங்கள் காதல் கண்டதும் காதலா? கொஞ்சங் கொஞ்சமாகக் கனிந்த காதலா? (அம்ரிதா நாணிச் சிவக்கிறாள்) நெடுமுடி: நாங்களபல நாள் சிந்தித்துத் திட்டமிட்டு அருகில் அமர்ந்து கொஞ்சங் கொஞ்சமாகச் செதுக்கிய பளிங்குச் சிலை எங்கள் காதல். அம்ரிதா: காதல்... எங்களுக்கு உண்கலம். அதுவே உணவன்று. அந்த உண்கலத்தில் நாங்கள்... பரிமாறிக் கொள்வது மனித நேயம். மேகலை: நயமாகப் பேசுகிறாய் அம்ரிதா! பெண் முருகுசுந்தரம் கவிதைகள் 217