பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிதி முளைத்தால் பனித்துளிகள் செத்துவிடும் பரிதி முளைப்பதற்குள் பாவையே வாராயே! வெள்ளி நிலவு விண்ணில் எழுந்ததடி! அல்லி குளத்தெழுந்து அகவிதழை அவிழ்த்ததடி1 ஆதவன் வந்தால் அல்லிமுகம் வாடிவிடும் ஆதவன் வருவதற்குள் ஆருயிரே வாராயோ! வானம் இருண்டதடி! வாரிஇறைத்து வைத்த மீனின் குடும்பம் மேலே தெரியுதடி! வெய்யோன் எழுந்தால் விண்மீன்கள் செத்துவிடும் வெய்யோன் எழுவதற்குள் தையலே வாராயோ! இசைக்கனவைக் கலைத்தெழுந்தான் கவிஞன், இந்த இன்பதுன்ப நனவுலகிற் கிறங்கி வந்தான். அசைச்சீர்கள் தழுவாமல் நடந்து செல்லும் அழகியதோர் காப்பியத்தை எதிரில் கண்டான். 'தசைக்கோவைக் காப்பியமே! நீயார்?' என்று தமிழ்க்கவிஞன் வியப்போடு கேட்டான்; எட்டுத் திசைதோறும் தன்புகழை நிறுத்தி வைத்த தேர்வேந்தன் திருமகள் நான் என்றாள் அன்னம். கவிஞர் முருகுசுந்தரம் 246