பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவுலகிற்கும் ஆவலுட்டும் காம... தேனு. அவள்தான் அகலிகை! முக்தல முனிவரின்! முற்றிய தவப்பயன்! ஆசிரமத்தைத் தேடி எத்தனையோ அதிதிகள் வருவதுண்டு. இந்திரனின் ஐராவதத்தையும் சந்திரனின் ஒளிவட்டத்தையும் ததீசியின் கூன்முதுகையும் துர்வாசரின் முரட்டுத் தாடியையும் குழந்தையின் குறு குறுப்போடு பார்ப்பாள். காம தேனு கற்பகத் தரு சங்கநிதி பதுமநிதி வரிசையில் இடம்பெற வேண்டிய ஏதோ ஒன்று, தவறிப் போய் இடம் மாறி தபோவனப் புழுதியில் கிடப்பதாக இந்திரன் கணிப்பு. அவள் மனத்திலும் ஒரு சினுக்கு... அவிழ்க்க முடியாதபடி. 匣血 கவிஞர் முருகுசுந்தரம் 2O