பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொகலாயக் கலையுலகின் இன்பக் கனவுகளுள் ஒன்று. அக்கனவின் ஒருதுளி இங்குக் காவிய வடிவம் பெற்றிருக்கிறது. வேந்தன் அணைத்த விளக்கு ஈரநிலா ஏன்கீழே வருவ தில்லை? எனக்கேட்டான்; என்முகத்துக் கஞ்சி என்றாள். கூரான வாழைப்பூ குனித லென்ன? கூறென்றான்; என்மார்புக் கஞ்சி என்றாள். தேரோடி மறைவானேன்? என்று கேட்டான்; தெரியாதா? எனநாணிச் சிரித்தாள்; போதும் ஆராய்ச்சி என்று சொன்னான்; அசைந்து சென்றே அறைக்கதவை ஒசையின்றி அடைத்து வந்தாள். நீக்குதுகில் ஆடைக்குள் கண்ப றிக்கும் நிலவைப்போல் நானிருக்க, அறையின் உள்ளே நாக்குத்தீ வாய்விளக்கு நமக்கேன்? என்று நாகரிக மாய்க்கேட்டாள்; உன்க டைக்கண் தாக்குதலை நேராகச் சந்திக் கத்தான் தளிர்க்கொடியே! எனக்கூறிச் சிரித்தான். ஆமாம்! ஆக்கிவைத்த அறுசுவையை இருட்டுக் குள்ளே ஆர்விரும்பிச் சாப்பிடுவார்? என்று சொன்னாள். அடுக்குமுத்து மாதுளையைப் பார சீகர் அனார் என்று சொல்லுகிறார்; கண்ணே உன்றன் எடுப்பதற்குக் குறையாத முத்த வாயை என்னவென்று கூறட்டும்? என்று கேட்டான். 'படுக்கைப்பூ முப்பத்தி ரண்டு முத்தைப் பதுக்கிவைத்த சிப்பியென்று சொல்லு மென்றான். கடிக்காதே முத்தென்றான்; இந்த முத்து கடிக்கின்ற கணுக்கரும்பு முத்தே! என்றாள். முருகுசுந்தரம் கவிதைகள் 259