பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுதுகண்டு மறைகின்ற கதிர வன்போல் புதைகின்ற கிழவயதை எட்டி விட்டேன் அழுதுகொண்டு மற்றவர்போல் செத்தால், என்னை அறிஞனென்று மதிப்பாரா? கேள்வி ஏரால் உழுதுகொண்டு சாகின்றேன்; என்றும் போல ஓயாமல் சிந்திக்கச் சொல்லு கின்றேன். விழுதிறங்கி என்கொள்கை எதிர்காலத்தில் விரிவானம் போல்விளங்கக் காண்பீர் நீங்கள்! இறுதியிலே நானொன்று வேண்டு கின்றேன் என்மக்கள் வளர்ந்துவரும் எதிர்கா லத்தில் முறைதவறி நடந்தாலோ, பண்பை விற்று முதல்சேர்க்க முனைந்தாலோ, உண்மை யென்னும் நெறிநிற்க மறுத்தாலோ, சிந்திக் காமல் நெடுமரமாய் நின்றாலோ, உலகோர் முன்னால் அறிஞரைப்போல் நடித்தாலோ இரக்க மின்றி அவர்களையும் நஞ்சூட்டிக் கொல்ல வேண்டும். கண்ணிரில் கரைகின்றேன் ஒதெல்லோ கருத்த உடலும், கனத்த உதடும் கொண்ட மூரினத்தைச் சார்ந்தவன். ஆனால் அஞ்சாமை மிக்க மலைத்தோள் வீரன். அவன் மனைவி டெஸ்டிமோனா வெனிசு நாட்டு வெள்ளைமயில்; கிள்ளை மொழிக் காரிகை. வஞ்சகரின் வாய்மொழியைக் கேட்டுப் பிஞ்சு நிலா போன்ற தன் மனைவியின் கற்பில் ஐயம் கொண்டு, அவளைக் கொல்லும் எல்லைக்கே சென்று விடுகிறான் ஒதெல்லோ. பளிங்குச் சிலைபோல் பஞ்சணையில் படுத்துறங்கும் அவளைப்பார்க்கிறான். அப்போது அவன் உள்ளம் பேசுகிறது; உதடும் பேசுகிறது. முருகுசுந்தரம் கவிதைகள் 269