பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைப்பணிபோல் நிறத்தவளே வெனிசில் வாழும் மானினத்தில் பிறந்தவளே கிரேக்க நாட்டுக் கலைக்கோயில் போன்றவளே! வர்ஜில் சொன்ன காவியமே! ஒவியமே சிற்பி தந்த சிலைப்பளிங்கைப் போலிருக்கம் டெஸ்டி மோனா! சிறுகீறல் உன்னுடம்பில் செய்வ தற்கும் மலைக்கின்ற தென்னுள்ளம்; உனது ரத்தம் மண்மீது சிந்துவதைப் பொறுக்க மாட்டேன். நாட்டாட்சி செய்வதற்குப் பிறந்த நானோ நகைமுத்தே காலமெல்லாம் இனிக்கும் காதற் கூட்டாட்சி உன்னோடு நடத்து தற்குக் கொண்டிருந்தேன் பேராசை அதனை இன்று வேட்டுவைத்துத் தகர்த்துவிட்டாய்; உன்னு டம்பை வேட்டைக்கா டாக்கிவிட்டாய்; பஞ்சனைப் போர்ப் பாட்டரசி! பண்பாட்டை விற்று விட்டுப் பரத்தைநிலைக் கிறங்கிவிட்டாய்! பழிசெய்திட்டாய்! சுண்ணாம்பை வெண்ணெயென்று நம்பி விட்டேன் சுள்ளானைத் தும்பியென்(று) ஏமாந்து விட்டேன் வெண்மையென்ற காரணத்தால் கூழாங் கல்லை விலையுயர்ந்த முத்தென்று மோசம் போனேன் கண்ணாடித் துண்டத்தை வைரம் என்றேன் கழிநீரைத் தேனென்றேன்; கனிச்சா றென்றேன். பண்ணென்றேன் கொட்டாவி தன்னை; உன்னைப் பத்தினியென் றிதுவரையில் எண்ணி விட்டேன். கவிஞர் முருகுசுந்தரம் 27Ο