பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொம்பேறிப் படர்கின்ற கொடிக்குக் கூடக் கொத்தாக மலர்கின்ற திட்ட முண்டு நம்பிக்கைக் குரியபெரும் திட்டத் தோடு நாட்டிளைஞர் கல்வியினைக் கற்கா விட்டால் தும்பறுந்த காளைகளாய் ஆவர்; இந்தத் துணைக்கண்டம் என்னாகும் ஒழுங்கில் லாத கும்பலுக்குக் களமாகும்; கலக்கு கின்ற குளமாகும்; ஆர்ப்பாட்டக் கோட்டை யாகும். புதியதொரு உலகத்தைச் செய்வோம் என்று புரட்சிப்பாப் பாடியவர், உம்பால் கொண்ட அதிகமதிப் பாலன்றோ இக்க ருத்தை அஞ்சாமல் எடுத்துரைத்தார்; பாயும் வைகை நதிநிதியால் நாற்றங்கால் சிறக்கும்; இந்த நன்னாடு மேன்மேலும் சிறப்ப தற்கு மதியுடையார் பலர் வேண்டும்; அவரை இந்த மதுரைப்பல் கலைக்கழகம் கொடுக்க வேண்டும். முழுவயிறு காணாதார், உழைத்து ழைத்து முதுகெலும்பு முறிந்தவர்கள், பிறர் உழைப்பை விழுங்குபவர் கைகளிலே பகடைக் காயாய் விழுந்தவர்கள், ஒடப்பர் ஆகி யோர்மேல் வழிகின்ற வியர்வையினால் அன்றோ, கல்வி வளர்க்கின்ற கலைக்கழகம் எழுப்பி யுள்ளோம்? எழுந்துவரும் இளஞ்சிங்க அணிவ குப்பே! இதையுணர்ந்து பொறுப்போடு நடந்து கொள்க! முருகுசுந்தரம் கவிதைகள் 281